மின்னம்பலம் : ஒரே
நேரத்தில் 18 பேர் பயணம் செய்யக் கூடிய 38 அடி நீள லிமோசின் ரக கார் வாகன
பதிவுக்காக கேரளா வந்துள்ளது. கலெக்டர் அலுவலகத்துக்குள் மக்கள் ஆர்வமுடன்
வந்து அந்த காருடன் செல்ஃபி எடுத்து சென்றனர்.
உலகின் மிகப்பெரிய கார் என்று லிமோசின் கூறப்படுகிறது.கூடுதல் சொகுசு வசதி மற்றும் அதிக இடவசதிக்கு பெயர் போனது லிமோசின் ரக கார்கள். இதில், டிரைவருக்கு தனி கேபின், கம்ப்யூட்டர் வசதி, 'டிவி', மியூசிக் சிஸ்டம், மினி பார், வாஷ் பேஸின் உள்ளிட்ட பல வசதிகள் உள்ளது. இந்த காருக்குள்ளே பிசினஸ் மீட்டிங்,மற்ற விவாதங்களும் நடைபெறும்.
கேரளாவில் ஆலப்புழா மாவட்டத்தில் உள்ள செங்கானூர் பகுதியைச் சேர்ந்த பாபு ஜான் துபாயில் தொழிலதிபராக உள்ளார். சினிமேக்ஸ் மல்டிபிளக்ஸ் தியேட்டர் வைத்துள்ளார். இவரும், பஞ்சாபைச் சேர்ந்த குருதேவ் சிங் என்பவரும் சேர்ந்து, எட்டு கோடி ரூபாய் விலை மதிப்புள்ள லிமோசின் காரை வாங்கினர்.
துபாயில் பயன்படுத்தப்பட்ட இந்த கார் ஆறு மாதங்களுக்கு முன் கப்பல் மூலம் கொச்சிக்கு கொண்டுவரப்பட்டது. ஆனால், சட்டப் பிரச்சனை காரணமாகக் காரை இறக்குமதி செய்ய சுங்கத்துறை அதிகாரிகள் மறுத்துவிட்டனர். இதற்கு நீதிமன்றமும் அனுமதியில்லை. இறுதியாக, பெங்களூருவில் உள்ள சுங்கம், கலால் மற்றும் சேவை வரி மேல்முறையீடு தீர்ப்பாயத்தில் மனு தாக்கல் செய்து கார் இறக்குமதிக்கு அனுமதி பெற்றனர்.
ஒருவழியாகக் காரை பதிவு செய்வதற்கு கொச்சியில் உள்ள காக்கநாடு என்ற இடத்தில் உள்ள கலெக்டர் அலுவலக வளாகத்துக்கு 38 அடி நீளமுள்ள கார் கொண்டுவரப்பட்டது. வளாகத்துக்குள் கார் நுழைய முடியவில்லை. அதனால்,கொச்சி துறைமுகம்- விமான நிலைய சாலையில் அந்த காரை நிறுத்தி எர்ணாகுளம் ஆர்.டி.ஓ., ரிஜி வர்கீஸ், பதிவு நடவடிக்கைகளை மேற்கொண்டார்.
படப்பிடிப்பிற்காக இந்த கார் கொச்சி கொண்டுவரப்பட்டுள்ளது என காரின் உரிமையாளர் பாபு ஜான் கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக