புதன், 4 அக்டோபர், 2017

சசிகலா விடுப்பு ... கூடுதல் ஆவணங்களுடன் புதிய மனு தாக்கல் .. சிறை நிர்வாகம் ஆலோசனை!

tamilthehindu :உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள கணவரை சந்திக்க அனுமதிக்குமாறு சசிகலா பரோல் கேட்டு விண்ணப்பித்திருந்தார். ஆனால், அந்த மனுவில் போதிய சான்றிதழ்கள் இல்லையென்றும், கூடுதல் ஆவணங்களுடன் புதிய மனுவை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் கர்நாடக சிறைத்துறை அறிவுறுத்தியுள்ளது.
தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா சொத்துக்குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில் கைதாகி, பெங்களூருவில் உள்ள பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவரது கணவர் நடராஜன் உடல்நிலை பாதிக்கப்பட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் நடராஜனின் சிறுநீரகம், கல்லீரல் உள்ளிட்ட உறுப்புகள் செயலிழந்து, கவலைக்கிடமாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நுரையீரலும் பாதிக்கப்பட்டிருக்கிறது.
தற்போது நடராஜனுக்கு டயாலிசிஸ் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. உறவினர் ஒருவரின் கல்லீரலை தானமாக பெற்று அவருக்கு பொருத்துவதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.

இதுகுறித்து சிறையில் உள்ள சசிகலாவுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து, பரோலில் சென்று கணவரை சந்திக்க சசிகலா முடிவெடுத்தார். அதன்படி இன்று சசிகலா பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையின் முதன்மை கண்காணிப்பாளர் சோமசேகரிடம் பரோல் கேட்டு 15 நாட்கள் பரோலில் விடுவிக்க அனுமதி கேட்டு மனுவை அளித்தார்.
அதில் அவசர பரோல் பெறத் தேவையான ஆவணங்கள் இணைக்கப்படவில்லை. எனவே, கூடுதல் ஆவணங்களை இணைத்து புதிதாக பரோலுக்கு விண்ணப்பிக்கலாம் என்று சசிகலாவுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை: