வியாழன், 5 அக்டோபர், 2017

நடராஜன் சிகிச்சை கேள்விகள் .... மூளை சாவு அடைந்ததாக கூறப்படும் இளைஞன் ,,, பதில்களை தேடி...

அரவிந்தன் சிவக்குமார்: "மனித சதை எப்பொழுதுமே கீழிருந்து மேல் நோக்கியே செல்லும் . ஏழைகளின் ஆரோக்கியத்தையும் உடல் வலுவையும் ஊறுஞ்சுவதோடு மட்டுமல்லாமல் உறுப்புகளை பிடுங்கி எடுத்து பணக்காரர்களுக்கு பரிசளிக்கும் ரத்தக்காட்டேரிகள் கட்டுப்பாடில்லா சந்தைகள்."
. . . . சிவப்பு சந்தை :ஸ்காட் காரி
19 வயது இளைஞர் சாலை விபத்து ஏற்பட்டது . கூலித்தொழிலாளி. தஞ்சை மருத்துவக் கல்லூரியில் அனுமதிக்கபட்டார். அவருக்கு தலையில் பலத்த காயம். அவர் தந்தை கூலித்தொழிலாளி அவரை மேல் சிகிச்சைக்கு வேண்டி தஞ்சை மருத்துவர்களின் அலோசனைக்கு ,மாறாக கோவை கங்கா மருத்துவமனைக்கு தொடர்பு கொள்கிறார்.தன் மகன் பெயரில் பயணத்திற்கான செலவு ரசீது போடப்படுகிறது தஞ்சையிலிருந்து திருச்சி ஒரு மணி நேரத்திற்கு ஒரு லட்சம் தன் மகனின் உடலை திருச்சிக்கு விமானத்தில் வருகிறது.அங்கிருந்து குளோபல் மருத்துவமனைக்கு . அந்த கார்பொரெட் மருத்துவமனையின் கார்பொரெட் நரம்பியல் மருத்துவர்கள் உடல் வந்தவுடன் மூளைச்சாவு என்று முத்திரையை தன் மகனின் முகத்தில் குத்தியவுடன் கல்லீரலும் சிறு நீரகமும் அறுவடை செய்து எடுத்துக் கொண்டார்கள். அது யாருக்கு போனதென்று இன்றைய செய்தித்தாளில் படித்திருக்கலாம். தன் மகனின் நுரையீரல், இருதயம் , யாருக்கு சென்றது, தோல், கண்கள் ..... மகனின் எலும்புக் கூட்டை மட்டுமாவது கொடுத்தார்களா ? அதை எப்படி சொந்த ஊருக்கு எடுத்து சென்றார் அந்த கூலித்தொழிலாளி?

இந்த செய்தி நம்முன்னே சில கேள்விகளை முன்வைக்கிறது.
தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவர்கள் நோயாளி மூளை சாவு அடைந்துவிட்டார் என்று ஏன் சான்றளிக்கவில்லை ?உறுப்புமாற்று சட்டத்தின் படி ஒருவர் மூளைச்சாவு அடைந்து விட்டதாக எந்த மருத்துவமனையில் சான்றளிக்கப்படுகிறதோ அந்த மருத்துவமனைக்கே உறுப்புகள் சொந்தம் .சான்றளிக்க தகுதியிடைய நரம்பியல், மயக்கமருந்தியல் நிபுணர்கள் தஞ்சை மருத்துவக்கல்லூரியில் இல்லாத போது மூளைச்சாவு அடைந்துவிட்டார் என்ற தகவலை எப்படி குளோபெல் மருத்துவமனைக்கு தெரிவிக்கப்பட்டது? எப்படி கங்கா மருத்துவமனைக்கு தெரிவுத்தார் நோயாளியின் தந்தை?
இதெல்லாம் கேள்வி கேட்க கூடாது தமிழக உறுப்பு மாற்று திட்டம் அப்பழுக்கற்று திறம்பட இயங்கிக் கொண்டிருக்கிறது.
ஏழைப் பெற்றோரின் பெருந்தன்மையும்(Benevolence) ) உறுப்பு தானம் செய்பவரின் பொதுநலப்பண்பும் (altruism ) நிரம்பி வழியும் வரை மெடிக்கல் டூரிசத்திலும் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையிலும் தமிழகம் நிச்சயம் உலகிலேயே முதலிடத்தில் இருக்கும்.
நாளை , மூளைச்சாவு அடைந்தவரின் உறுப்பு தானத்திற்கு பெற்றோர் ஒப்புதல் தேவையில்லை என்ற நிலை மாறி கார்பொரெட் மருத்துவமனைகள் கட்டாய அறுவடை செய்வதற்கு ஏதுவாக சட்டத்திருத்தம் நிச்சயம் வரும்.
அதுவரை ஏழைப்பெற்றோரின் பெருந்தன்மையையும் மூளைச்சாவு அடைந்தவரின் பொதுநலப்பண்பும் எங்களுக்கு தேவை...
அவாயா என்ற ஜப்பானிய சமூகவியலாளர் கூறியது போன்று "நம்முடைய உடல் கண்காணிக்கப்பட்டுக்கொண்டிருக்கிறது. சிலர் வாழும் காலத்தை நீட்டிப்பதற்கு ,நம் உடல் உறுப்புகள் பிரித்தெடுத்து பொறுத்தப்படும் மாற்று பாகங்களாகவே அந்த பேராசைக்கண்களுக்கு தெரிகிறது."
மருத்துவர் அரவிந்தன் சிவகுமார் எழுதிய பதிவு..

கருத்துகள் இல்லை: