செவ்வாய், 3 அக்டோபர், 2017

கலைஞர் பெயரை எடப்பாடியும் பன்னீரும் மறைத்துவிட முடியுமா? ஓரத்திலா இடம் கேட்கவேண்டும் பிரபு சார்?

vincent raj :என் ஆயுள் காலத்தின் சில வருடங்களை உனக்கு தருகிறேன்.நான் இறந்தாலும் நீ நன்றாக இருக்கவேண்டும் நண்பா என்று கலைஞரை பார்த்து கண்ணீர் மல்க பேசியவர் சிவாஜி கணேசன்.இது நடக்காது என்பது வேறு.ஆனால் கலைஞர் மீது சிவாஜி வைத்து இருந்த அன்பின் வெளிப்பாடாகத்தான் இதனை எடுத்து கொள்ள வேண்டும்.கலைஞருக்காக உயிரையே தருகிறேன் என்று சொன்ன உங்கள் அப்பாவின் வார்த்தையின் வலிமையை நீங்கள் உணர்ந்து இருக்கிறீர்களா பிரபு? ஒரு பிச்சைக்காரரை போன்று போரில் தோல்வி அடைந்த கோழை ஒருவன் மண்டியிட்டு மன்னிப்பு கேட்பது போன்று கலைஞரின் படம் இந்த மணி மண்டபத்தில் எங்காவது ஒரு இடத்தில இருந்தால் நல்லது என்று கெஞ்சி கொண்டு இருக்கிறீர்கள்? கலைஞனின் அடையாளம் கம்பிரம்.நேர்மை.அண்டி பிழைப்பது அல்ல.மணி மண்டபம் கட்டாமல் இருந்தால் நமது மக்கள் விட்டுவிடுவார்களா? உங்கள் அப்பாவிற்காக ஒரு கலைஞனுக்காக நமது மக்கள் அரசியல் ரீதியாக குரல் கொடுத்து இருப்பார்கள்.நீங்கள் ஒரு கோழையின் அடையாளம் பிரபு.

கருத்துகள் இல்லை: