![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg12jQACMSEROpmi81rWqq9eu9tjxmI4sWmX-zytnUZbHLACLlKisFzpT4JRWEYvKMpi5QK-YaEQM1X9b-IXw-52eJ163P9ig9uB49tNN4YmeKWtmlRZ59kLclP76nHS2a7IMp3J1jJBWM/s400/images%25E0%25AE%25B0%25E0%25AF%258D%25E0%25AE%25B0%25E0%25AF%258D%25E0%25AE%25B0%25E0%25AF%258D%25E0%25AE%25B0%25E0%25AF%258D%25E0%25AE%25B0%25E0%25AF%258D%25E0%25AE%25B0%25E0%25AF%258D%25E0%25AE%25B0%25E0%25AF%258D%25E0%25AE%25B0%25E0%25AF%258D.jpg)
Shankar Oneindia Tamil ஸ்ரீசாய்ராம் நிறுவனம் தயாரிப்பில் வெளியான திரைப்படம் கருப்பன். விஜய் சேதுபதி, பாபி சிம்ஹா, பசுபதி நடித்துள்ள கருப்பன் திரைப்படத்தை ரேணிகுண்டா பன்னீர்செல்வம் கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்கி உள்ளார்.
இப்படத்துடன் நெறி, ஹர ஹர மஹாதேவகி இரு நாட்களுக்கு முன் முருகதாஸ் இயக்கத்தில் மகேஷ்பாபு நடித்த ஸ்பைடர் ஆகிய படங்களும் ரீலீஸ் ஆகின. கருப்பன் தியேட்டர்களில் ரீலீஸ் ஆன செப்டம்பர் 29 முதல் வசூலில் முதலிடத்தில் உள்ளது. தமிழ்நாடு முழுவதும் 300க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் கருப்பன் குடும்பத்துடன் பார்க்கும் படமாக மாறி வருகிறது. முதல் நாள் 4 கோடி மொத்த வசூல் ஆன கருப்பன் சனி ஞாயிற்றுகிழமைகளில் 10 கோடி வரை தியேட்டர்களில் வசூல் செய்திருக்கிறது. இந்த வசூல் துப்பறிவாளன் பட வசூலை காட்டிலும் 20% அதிகம் என்கின்றனர் விநியோகஸ்தர்கள் தரப்பில்.
புதிய கதை இல்லை, அரதப் பழசான திரைக்கதைதான். பழைய சாதம் பலருக்கும் பிடிக்கும், அதை பச்சை மிளகாய், வெங்காயம், அல்லது கருவாடு என பக்குவமாக சாப்பிடக் கொடுத்தால் குழந்தை முதல் பெரியவர் வரை விரும்பி சாப்பிடுவார்கள். கருப்பன் படமும் அப்படித்தான். எம்.ஜி.ஆர், சிவாஜி படங்களில் இருந்து சில பாடல்கள், பழைய தமிழ் படங்களில் இருக்கும் அடுத்தவன் பொண்டாட்டி மீது ஆசைப்படும் வில்லன், அண்ணன் தம்பி பாசம் இவைகளை கலந்து கட்டிய திரைக்கதை தான் கருப்பன் படம்.
எல்லோருக்கும் பிடித்த நடிகர் விஜய் சேதுபதி நாயகன் என்பதால் பழைய சாதமாக இருந்தாலும் வெறுப்பின்றி பார்க்கக்கூடிய படமாக கருப்பன் இருப்பதால் குடும்பங்கள் கூட்டம் கூட்டமாக வந்து பார்ப்பதாக கூறுகிறார் அனுபவம் வாய்ந்த தியேட்டர் மேனேஜர் கருப்பன் தமிழக தியேட்டர்களில் ஓடி முடியும் போது 25 கோடி வரை மொத்த வசூல் ஆககூடிய வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. - ஏகலைவன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக