வெப்துனியா : பிரபல தமிழ் தொலைக்காட்சி ஒன்று
பிக் பாஸ் நிகழ்ச்சியை தமிழில் வழங்கியது. 100 நாட்கள் நடைபெற்ற இந்த
ரியாலிட்டி ஷோவை பிரபல நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கினார். இதில் சில
நேரங்களில் கமல் ஒரு சார்பாக நடந்துகொண்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.பிக பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட
பிரபலங்கள் எல்லோரும் திரைத்துறையை சேர்தவர்கள். அவர்களில் சாதாரண பெண்ணாக
ஜல்லிக்காடு புகழ் ஜூலி கலந்துகொண்டார். தொடக்கத்தில் புகழப்பட்ட, தூக்கி
வைத்து கொண்டாடப்பட்ட ஜூலி இறுதியில் மிகவும் அதிகமாக திட்டப்பட்ட,
வெறுக்கப்பட்ட நபராக மாறினார்."
ஓவியாவுக்கு எதிராக ஜூலி செயல்பட்டதில் தனது பெயரை மொத்தமாக கெடுத்துக்கொண்டார் ஜூலி. இந்நிலையில் தற்போது பிக் பாஸ் 100 நாட்கள் முடிந்து வெற்றியாளரும் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் ஜூலி தனது பிக் பாஸ் அனுபவங்களை பிரபல வார இதழ் ஒன்றில் பகிர்ந்துள்ளார்.
அப்போது பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய நடிகர் கமல்ஹாசன் குறித்து ஜூலியிடம் கேட்கப்பட்ட கேள்விக்கு பதில் அளித்த அவர், கல்லூரியில் படிக்கும்போது, மேடையில் அமர்ந்திருந்த அவரை தூரத்தில் இருந்து பார்த்த நான், அவர் அருகிலிருந்து பேச வாய்ப்புக் கிடைத்தது பெரிய பாக்கியம்.
நிகழ்ச்சியில் எல்லார்கிட்டயும் எப்படி மரியாதையா நடந்துக்கிட்டாரோ, அதே மரியாதையை சாதாரண பெண்ணான எனக்கும் கொடுத்தார். ஆனால், சில விஷயங்களில் ஒரு சார்பாக நடந்துகொண்டாரோ என்று எனக்குத் தோன்றுகிறது என கமல் மீது குற்றச்சாட்டை வைத்தார். ஓவியா, ஜூலி இடையே நடந்த விஷயத்தில் காட்டப்பட்ட குறும்படம் பற்றி தான் ஜூலி இப்படி கூறியிருக்க கூடும் என நினைக்கத் தோன்றுகிறது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக