
தினமலர் :புதுடில்லி: ஏழை, நடுத்தர வர்க்கத்தினரின் வாழ்வை
மேம்படுத்துவதே இந்த அரசின் லட்சியம் என பிரதமர் மோடி பேசினார்.
இந்திய கம்பெனி செயலாளர்கள் மையத்தின் 50வது ஆண்டு பொன்விழாவை பிரதமர் மோடி இன்று துவக்கி வைத்து பேசினார்.அப்போது அவர் பேசியது உங்களுடைய கடின உழைப்பும் அதற்காக நீங்கள் ஈட்டும் வருவாயின் மதிப்பினை இந்த அரசு நன்கு புரிந்து கொள்கிறது, இந்த அரசின் கொள்கைகள் மற்றும் திட்டங்களில் மிகுந்த கவனம் செலுத்துவதே ஏழை மற்றும் நடுத்தர வர்க்கத்தினரின் வாழ்வை மேம்படுத்துவதில் தான். ஒரு பெரிய மாற்றத்தின் நேரம் இது. நேர்மையான, வெளிப்படையான ஆட்சியின் முக்கியத்துவம் உணரப்பட்டுள்ளது.
முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின் 6 ஆண்டுகளில் மொத்த உள்நாட்டு உற்பத்தி திறன் வெறும் 5.7 சதவீதம் தான் இருந்தது. கடந்த மூன்றாண்டுகளில் வளர்ச்சி விகிதம் 7.5 சதவீதம் இருந்த பின்னர், கடந்த ஏப்ரல் மற்றும் ஜூன் மாதங்களில் வளர்ச்சியில் சரிவு ஏற்பட்டதை ஏற்றுக்கொள்கிறோம். இருப்பினும் வரும் காலாண்டில் 7.7 சதவீத வளர்ச்சி பெறும் என ரிசர்வ் வங்கி கணித்துள்ளது.
கார் விற்பனை, விமான போக்குவரத்து, விமான சரக்கு சேவை, மற்றும் தொலைபேசி சந்தாதாரர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது: வளர்ச்சியில் இந்தியா புதிய உச்சத்தை எட்ட தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் இந்த அரசு மேற்கொண்டுவருகிறது என உறுதியளிக்கிறேன். ஜி.எஸ்.டி. வரியால் வர்த்தகர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை ஆய்வு செய்ய ஜிஎஸ்டி கவுன்சிலுக்கு உத்தரவிட்டுள்ளேன். இந்த பரிந்துரைகளின் படி மாற்றங்களை கொண்டு வர தயாராக உள்ளோம். இவ்வாறு மோடி பேசினார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக