திங்கள், 2 அக்டோபர், 2017

மகாத்மா’ காந்தி எனும் சோளக்காட்டு பொம்மை ! – மின்னூல்

உண்ணாவிரதமிருந்தார் தான் ஆனால் யாருடைய நலனுக்காக? காந்தி போராடினாரா? போராட்டத்தை காட்டிக்கொடுத்தாரா? தாழ்த்தப்பட்ட மக்களுக்கு கொடுக்கப்பட்ட சலுகைகளை பறிப்பதற்காக அம்பேத்கரை எதிர்த்து ஏன் உண்ணாவிரதமிருந்தார்?
காந்தியை பற்றி பாடப்புத்தகங்களிலும் பொதுவிலும் ஆளும்வர்க்க அடிபொடிகளால் சொல்லப்படும் கருத்துக்கள் தான் பொதுவெளியிலும் ஆதிக்கம் செலுத்துகின்றன. காந்தி உண்ணாவிரதமிருந்தார், ராட்டை சுற்றினார் என்று மாணவர்களுக்கு, அஹிம்சை போதித்தார், சத்யாகிரகம் செய்தார், உண்ணாவிரதம் இருந்தார் என்றெல்லாம் வகுப்பெடுக்கப்படுகின்றது.
உண்ணாவிரதமிருந்தார் தான் ஆனால் யாருடைய நலனுக்காக? காந்தி போராடினாரா? போராட்டத்தை காட்டிக்கொடுத்தாரா? தாழ்த்தப்பட்ட மக்களுக்கு கொடுக்கப்பட்ட சலுகைகளை பறிப்பதற்காக அம்பேத்கரை எதிர்த்து ஏன் உண்ணாவிரதமிருந்தார்? சாதி பற்றிய காந்தியின் கருத்து என்ன? இது போன்ற பல கேள்விகளுக்கு விடை காண வேண்டியது அவசியம்.

காந்தி பற்றி கட்டமைக்கப்பட்டிருக்கும் பிம்பம் உண்மையானதா? என்பதை அவர் வாழ்ந்த காலத்தில் வாழ்ந்த மக்கள் தலைவர்களின் எழுத்திலும் பேச்சிலும் பார்க்கலாம். குறிப்பாக பார்ப்பன இந்துமதத்தின் சாதிமுறைக்கு எதிராக இறுதிவரை போராடிய பெரியார், அம்பேத்கரின் எழுத்துக்களில் இருந்து தெரிந்து கொள்வதற்கு ஏராளமிருக்கின்றன.
காந்தி யாருக்கான தலைவர்?
பிரிட்டிஷாரை எதிர்த்த காந்தியின் போராட்ட நோக்கத்தை அம்பலப்படுத்துகிறார் பெரியார். ராஜாக்கள், ஜமீன்தார்கள், முதலாளிகளுக்கு எந்த பிரச்சனையும் ஏற்படாத வகையில் போராட்டத்தை கட்டியமைத்தவர் தான் காந்தி. பொதுவுடைமை கொள்கை செல்வாக்கு பெறாமல் இருப்பதற்காக காந்தியின் செல்வாக்கை அதிகரிக்க வேண்டிய தேவை ஆங்கில அரசுக்கும், இந்திய முதலாளிகளுக்கும், ஜமீன்தார்களுக்கும், பார்ப்பன ஆதிக்க சாதிகளுக்கும் இருந்தது. அந்த புரவலர்களின் உதவியால் காந்தி மக்களை கட்டி போட்டதையும் முக்கியமாக அவரே இதை ஒப்புக்கொண்டதையும் அம்பலப்படுத்துகிறார் பெரியார்.

மகாத்மா காந்தி எனும் சோளக்காட்டு பொம்மை!

நூலில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள்:
  • யார் இந்த காந்தி ? தந்தை பெரியார்
  • ‘மகாத்மா’ காந்தி எனும் சோளக்காட்டு பொம்மை!
  • வரலாறு : பிர்லாவின் கரம்தான் காந்தியின் ஊடக அறம் !
  • அகிம்சையின் துரோகம் வன்முறையின் தியாகம்
நான்கு கட்டுரைகள் – 96 பக்கங்கள் – அழகிய வடிவமைப்பில் – மின் நூல் விலை ரூ. 20.00
20.00 Add to cart
மின்னூலை வாங்க Add to cart பட்டனை அழுத்தவும். பின்னர் View cart அழுத்தி, உங்கள் கூடையில்(Cart), எண்ணிக்கையை(Quantity) சரிபார்த்துவிட்டு, Proceed to checkout-பட்டனை அழுத்தி, உங்கள் பெயர் மற்றும் தகவல்களை பதிவு செய்து Place order-ஐ அழுத்துங்கள். உங்களுக்கான பணம் செலுத்தும் முறையை தெரிவு செய்து பணத்தை செலுத்துங்கள்.இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். பணம் அனுப்பிய பிறகு உங்களது மின்னஞ்சலுக்கு உடனேயே டவுண்லோடு இணைப்பு வரும். அதிலிருந்து நீங்கள் இரண்டு நாட்களுக்குள் டவுண்லோடு செய்யலாம். வெளிநாடுகளில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக பணம் அனுப்பிவிட்டு, விவரத்தை உடன் அறியத்தரவும். உடன் உங்களுக்கு மின் நூல் அனுப்பி வைக்கப்படும்.
Mobile – (91) 97100 82506, (91) 99411 75876
Emailvinavu@gmail.com
இந்நூலின் கட்டுரைகள் வினவு தளத்தில் ஏற்கனவே வெளியாகியுள்ளன

கருத்துகள் இல்லை: