புதன், 21 டிசம்பர், 2016

பாஜகவின் புதுநோட்டு திட்டம் .. படுதோல்வி . சந்தரபாபு நாயுடுவுக்கு இப்பத்தான் புரியரதாம்

Naidu's comment on demonetization irks BJPஹைதராபாத்: ரூபாய் நோட்டு ஒழிப்பு விவகாரத்தில் இதற்கெல்லாம் காரணம் தெலுங்கு தேசம் கட்சிதான் என்று ஆரம்பத்தில் மா்ர் தட்டி, மோடிக்கு வரவேற்பு தெரிவித்து, அதே வேகத்தில் ரூபாய் நோட்டு விவகாரம் தொடர்பாக மத்திய அரசு அமைத்த உயர் மட்டக் கமிட்டியின் தலைவராகவும் நியமிக்கப்பட்ட ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு தற்போது இந்த விவகாரத்தில் தலை குனிவதாக கூறியுள்ளது பாஜகவை அதிர வைத்துள்ளது.
உயர் மதிப்பு ரூபாய் நோட்டுக்கள் ஒழிக்கப்பட்டு 40 நாட்களாகியும் மக்கள் பிரச்சினை தீரவில்லை. இதைத் தீர்க்க யோசித்து யோசித்துப் பார்த்தும் எந்தத் தீர்வும் எனக்குத் தெரியவில்லை. தலை குனிந்து நிற்கிறேன் என்று நாயுடு கூறியுள்ளது பாஜக வட்டாரத்தையும், பிரதமர் மோடியையும் அதிர வைப்பதாக உள்ளது.


உயர் மட்டக் கமிட்டியின் தலைவராக உள்ள நாயுடுவே, இந்தத் திட்டம் தோல்வி என்பதை மறைமுகமாக கூறி விட்டதால் பாஜக தரப்புக்கு பெரும் தர்மசங்கடம் ஏற்பட்டுள்ளது. ஆனால் மக்களின் அவதியையும், சிரமத்தையும் இனியும் பார்த்தும் பார்க்காமலும் போக முடியாது என்ற எதார்த்தத்தை உணர்ந்தே நாயுடு இப்படிப் பேசியுள்ளதாக கருதப்படுகிறது.
500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்களை ஒழித்த பின்னர் அதுதொடர்பாக ஏற்பட்ட பிரச்சினைகளுக்குத் தீர்வு காண உயர் மட்டக் கமிட்டியை மோடி உத்தரவின் பேரில் மத்திய அரசு அமைத்தது. அதன் ஒருங்கிணைப்பாளராக நியமிக்கப்பட்டார் சந்திரபாபு நாயுடு. புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி உள்பட 13 பேர் இதில் இடம் பெற்றுள்ளனர்.
இந்த நிலையில் ரூபாய் நோட்டு ஒழிப்பு தவறாகப் போய் விட்டதாக மறைமுகமாக கூறியுள்ள நாயுடுவின் பேச்சு மோடிக்கு பெரும் தர்மசங்கடமாக மாறியுள்ளது. பிரச்சினைகளுக்குத் தீர்வு காண வேண்டியவரே பிரச்சினையைத் தீர்க்கும் வழி தெரியவில்லை என்று கூறியிருப்பது பாஜகவுக்கும் ஷாக் கொடுத்துள்ளது.
விஜயவாடாவில் நடந்த தெலுங்குதேசம் கட்சியின் எம்.பிக்கள், எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில் நாயுடு பேசுகையில், இந்தத் திட்டத்தை நான் விரும்பவில்லை. இருப்பினும் இந்த முடிவை ஆதரித்தேன். இப்போது 40 நாட்களாகி விட்டது. ஆனாலும் மக்களின் பிரச்சினைகள் தீரவில்லை. மாறாக அப்படியே உள்ளன. ஏராளமாக உள்ளன. தீர்வுகளும் காண முடியவில்லை.
இதுதொடர்பாக நான் தினசரி சிந்தித்து வருகிறேன். ஒரு தீர்வும் தென்படவில்லை. தலையை உடைத்துக் கொண்டு யோசித்தும் கூட என்னால் தலையைக் குனியத்தான் முடிகிறதே தவிர தீர்வு காண முடியவில்லை என்று கூறியுள்ளார் நாயுடு.
இந்தத் திட்டம் பெரும் தோல்வி என்பதை நாயுடு உணர்ந்திருப்பதாகவே கருதப்படுகிறது. இதைத்தான் இப்படி அவர் மறைமுகமாக சொல்வதாக கூறப்படுகிறது. இந்தத் திட்டத்தால் உண்மையில் கறுப்புப் பண முதலைகளுக்கு எந்தப் பிரச்சினையும் ஏற்பட்டதாக தெரியவில்லை. மாறாக அப்பாவி பொதுமக்கள்தான் தொடர்ந்து வங்கிகளுக்கும், ஏடிஎம் மையங்களுக்கும் தொடர்ந்து அலைந்து கொண்டுள்ளனர்.
மறுபக்கம் ரிசர்வ் வங்கி தொடர்ந்து மாற்றி மாற்றி புதிய புதிய விதிமுறைகளை அறிவித்து மக்களை தொடர்ந்து குழப்பிக் கொண்டுள்ளது. அவர்கள் அனுமதிக்கும் பணத்தை எடுக்கவும் முடியவில்லை. காரணம், வங்கிகளிடம் போனால் எங்களிடம் பணம் இல்லை என்பது நிரந்தரமான பதிலாக மாறி விட்டது. இதனால் ரிசர்வ் வங்கியின் உத்தரவுகள் முழுமையாக இதுவரை அமல்படுத்தப்படவில்லை என்பதே எதார்த்தமாக உள்ளது.
இந்தியா முழுவதும் இப்பிரச்சினை நிலவுகிறது. மக்களும் கடும் அதிருப்தியில் உள்ளனர். இதையெல்லாம் உணர்ந்தே நாயுடு ரூபாய் நோட்டு ஒழிப்பு ஆதரவு நிலையிலிருந்து பின்வாங்க ஆரம்பித்திருப்பதாக கூறப்படுகிறது.  tamiloneindia

கருத்துகள் இல்லை: