அடிமேல் அடிவாங்கிக்கொண்டிருக்கிறது அ.தி.மு.க. தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்துக்கு 11 உறுப்பினர்களை நியமித்தது செல்லாது என சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
இந்த 11 பேரும் அ.தி.மு.க.வினர் என்பதை சுட்டிக்காட்டி வழக்கு தொடர்ந்தவர் தி.மு.கவின் செய்தி தொடர்பாளரும், வழக்கறிஞருமான டி.கே.எஸ்.இளங்கோவன்.
கடந்த 31.01.2016 அன்று சென்னையில் உள்ள அரசு பணியாளர் தேர்வாணையத்துக்கு 11 உறுப்பினர்களை நியமித்தது தமிழக அரசு.
அவ்வாறு நியமிக்கப்பட்ட 11 உறுப்பினர்களில் அ.தி.மு.க.கவுன்சிலர் பிரதாப் குமார் உட்பட அனைவருமே அ.தி.மு.க.வைச் சேர்ந்தவர்கள்.
இதனை சுட்டிக்காட்டி டி.கே.எஸ். இளங்கோவன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடர்ந்தார்.
இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல், நீதிபதி மகாதேவன் ஆகியோர் பெஞ்ச் 11 உறுப்பினர்களின் நியமனத்தை ரத்து செய்தது.
அரசு பணியாளர்களை நியமிக்கக்கூடிய தேர்வாணையத்தில் கட்சிக்காரர்களை எதற்காக நியமிக்க வேண்டும் என்று அ.தி.மு.க.வுக்கு, தி.மு.க. நீதிமன்றத்தின் மூலம் ஒரு கொட்டு வைத்திருக்கிறது.
இது தொடர்பாக தமிழக அரசு செய்ய போவதாக கூறியுள்ளது.லைவ்டே.காம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக