மின்னம்பலம் :டெல்லி
மாநில துணை நிலை ஆளுநர் நஜீப் ஜங் தனது பதவியை, திடீரென ராஜினாமா
செய்துள்ளார். டெல்லி மாநிலத்தை ஆம் ஆத்மி கைப்பற்றி அரவிந்த் கெஜ்ரிவால்
முதல்வர் ஆன பிறகு, டெல்லி மாநிலத்திற்கு ஆளுநராக மோடி அரசால்
நியமிக்கப்பட்டார் நஜீப் ஜங்.
யூனியன் பிரதேச அந்தஸ்து உடைய டெல்லியில் யாருக்கு கூடுதல் அதிகாரம் என்ற போட்டி முதல்வர் கெஜ்ரிவாலுக்கும், ஆளுநருக்கும் இடையே நடந்தது. மாநில அரசின் பல நியமனங்களை ரத்து செய்தார் ஆளுநர். இதனால் கடும் மன உளைச்சலுக்கு ஆளான கெஜ்ரிவால் நீதிமன்றத்தை நாடியும் பிரயோஜனம் இல்லாத நிலையில், மத்திய அரசுடன் மோதல் போக்கை கடைப்பிடித்து வருகிறார்.
நேரடியாக ஆளுநரும் முதல்வரும் மோதி வந்த நிலையில், இன்று நஜீப் ஜங் தன் ராஜினாமா கடிதத்தை மத்திய அரசுக்கு அனுப்பியுள்ளார். அதில் ஆளுநராக இருந்தபோது சகலவிதமான ஒத்துழைப்புகளையும் நல்கிய பிரதமர் மோடிக்கும், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கும், டெல்லி மக்களுக்கும் நன்றி தெரிவித்துள்ளார். இனி வருங்காலத்தில் பதவியிலிருந்து விலகி, தன் ஆசிரியர் பணியை தொடர இருப்பதாக தெரிவித்துள்ளார் நஜீப் ஜங்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக