வியாழன், 22 டிசம்பர், 2016

புதிய தலைமை செயலாளராக கிரிஜா வைத்தியநாதன்; பாஜகவுக்கு ஆதரவாக செயல்படுவாரா?

girijathetimestamil.com :தமிழ்நாட்டின் புதிய தலைமை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள கிரிஜா வைத்தியநாதன், தற்போது நில நிர்வாகத்துறை ஆணையராக  பொறுப்பு வகித்து வருகிறார்.
அதிமுக அரசு 2011-ல் ஆட்சிக்கு வந்தபோது, சுகாதாரத்துறை செயலாளராக பொறுப்பு வகித்த கிரிஜா, அப்போது அதிகம் பேசப்பட்ட “முதலமைச்சர் காப்பீடு திட்டம்” உருவாகுவதற்கு நடவடிக்கை மேற்கொண்டவர் என்று கூறப்படுகிறது.
girija11.jpg
1930987_34177840875_5303_nஓய்வு பெறுவதற்கு இரண்டு வருடங்கள் மட்டுமே மீதமுள்ள, கிரிஜா வைத்தியநாதன்  தலைமைச் செயலாளராக மட்டுமல்லாமல்,  நிர்வாக சீர்திருத்தம் மற்றும் கண்காணிப்பு ஆணையர் பதவிகளையும் கூடுதலாக கவனிப்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
giri.jpgகிரிஜா வைத்தியநாதன், கடந்த 1981ம் ஆண்டு பேட்ஜ் ஐ.ஏ.எஸ்., அதிகாரி. சென்னை ஐஐடியில் படித்து, பட்டம் பெற்றவர். இவரது தந்தை வெங்கட ரமணன், ரிசர்வ் வங்கி கவர்னராக 1990 முதல் 1992 வரை இருந்தார்.

அது மட்டுமல்லாமல், பாரதீய ஜனதாவில் உள்ள நடிகர் எஸ்.வீ.சேகரின் அண்ணிதான் கிரிஜா வைத்தியநாதன் என்பதும் குறிப்பிடத்தக்கது. 

கருத்துகள் இல்லை: