
இப்படியொரு காரியத்தைச் செய்யமாட்டேன் என்று உறுதிபூண்டார். ஆனால் மோடியோ தான் பிடித்த முயலுக்கு மூன்று கால் என்றே சாதிக்கிறார்.
தப்புக் கணக்கு
கருப்புப் பணத்தையும் கள்ளப்பணத்தையும் தடுப்போம்; ஊழலை ஒழிப்போம் என்ற அவர்களின் உரைகள் பொய்யாகிவிட்டன.

சிறைக்குச் செல்வது யார் ?
கடந்த 45 நாட்களில் 62 முறை வங்கியில் பணம் எடுப்பது, செலுத்துவது குறித்த விதிகளை மாற்றியுள்ளனர். மக்கள் தொகையில் மொத்தம் 45 கோடி பேர் அன்றாடம் சம்பாதிப்பவர்களாக உள்ளனர். அவர்கள் வேலையிழந்து தவித்துவருகின்றனர். கருப்பு பணம், கள்ள நோட்டு, ஊழல் ஆகியவற்றை ஒழிக்கும் நோக்கத்தில் ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பு வெளியிடப்பட்டதாக மத்திய அரசு கூறுகிறது. ஆனால், இதில் எந்த நோக்கமும் நிறைவேறாது. ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பால் மட்டும் கருப்பு பணத்தை ஒழிக்க முடியாது. கருப்பு பணத்துக்கான தேவை இருக்கும்வரை அதன் விநியோகம் இருக்கும். அதற்கு முதலில் ஊற்றுக்கண்ணை தடுக்க வேண்டும். உங்களுடைய அக்கவுண்டில் பணம் இல்லாமலே யாருக்காவது காசோலை அளித்தீர்கள் என்றால் உங்களுக்கு கடுமையான சிறைத்தண்டனை கிடைக்கும். ஆனால் இப்போதெல்லாம் நீங்கள் கொடுக்கும் காசோலைக்கு வங்கிகளிலேயே பணம் இருப்பதில்லை. இதற்காக யார் சிறைக்குச் செல்வார்கள்? எந்த அரசுக்கும், பிரதமருக்கும் இத்தகைய மோசமான பேரிடரை மக்கள் மேல் கட்டவிழ்த்துவிட உரிமை இல்லை. பிரதமர் மோடி, ஏழைகளின் நிலையைப் புறக்கணித்து மோசமான வழிகாட்டுதலால் ரூபாய் நோட்டு நடவடிக்கையில் தவறிழைத்து விட்டார். இதை அவர் ஒப்புக்கொண்டே ஆகவேண்டும். மின்னம்பலம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக