ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு தமிழக பார்ப்பனர்களுக்கு ஒருவித அரசியல்
நெருக்கடி ஏற்பட்டிருக்கிறது., ஜெயலலிதா என்னும் பிம்பத்தின்
இருப்பே(presence) பார்ப்பனர்களுக்கு தமிழகத்தில் ஒரு பாதுகாப்பு உணர்வை
தந்துவந்தது. ஜெவுக்கு முன்பு எம்ஜிஆரின் இருப்பு மூலம் அவர்களுக்கு அந்த
பாதுகாப்பு உணர்வு இருந்துவந்தது. இப்போது, ஜெவின் மறைவால் அவர்களுக்கு
இங்கே பாதுகாப்பு உணர்வு(Secured feeling) இல்லை. தங்கள் பாதுகாப்பு
உணர்வை, அரசியலை மீட்டுருவாக்க பார்ப்பனர்கள் குட்டிக்கரணம் போட்டுக்கொண்டிருக்கிறார்கள். தீபாவை அவர்கள் தூக்கிக்கொண்டு வருவது இதன் அடிப்படையில்தான்!
ஜெவின் அரசியல் வெற்றியும் அவரது பிம்பமும் தவிர்க்க முடியாததாகிப் போனபின்பு, அடித்தட்டு மக்களால் உருவாக்கப்பட்ட ஜெவை பார்ப்பனர்கள் கொஞ்சம்கொஞ்சமாக கபளீகரம் செய்யத் தொடங்கினர். அதில் முடிந்த அளவு வெற்றியும் கண்டனர்.
ஆட்சியின் பிற்காலத்தில், பார்ப்பனர்கள் தங்களுக்கு தேவையான அனைத்தையும் ஜெவின் மூலம் நிறைவேற்றிக்கொள்ள அவர் உறுதுணையாக இருந்தார். அர்ச்சகர் சட்டம், சிதம்பரம் கோயில் உள்ளிட்ட இன்னபிற விஷயங்களை சொல்லலாம்! இறுதியில் சோ ராமசாமியே ஜெவின் ஆஸ்தான ஆலோசகராகவே ஆனார்.
இந்நிலையில் பார்ப்பனர்களின் நம்பிக்கையை ஜெ பெற்றாலும், சசிகலா மீது அவர்களுக்கு ஒருவித ஒவ்வாமை இருந்திருக்கிறது. அதிமுகவுக்குள்ளேயே ஜெ ஆதரவுக்குழுவில் பூணூல் மேனிகள் இருந்தன. ஆனால், சசிகலா ஆதரவுத்தரப்பில் முறுக்கு மீசைகளே இருந்தன. ஆனால், இவர்களுக்குள் ஒருவித நிலைபெறாத சமரசம் மேலோட்டமாகவே நிலவியது.
ஜெவின் இமேஜை பார்ப்பனர்கள் திட்டமிட்டு பாதுகாத்து உயர்த்திவந்த சமயத்தில், சசிகலாவின் இமேஜை பார்ப்பனக்கூட்டம் (சோ உட்பட) டேமேஜ் செய்யத் தொடங்கியது. சசிகலா மீதான மன்னார்குடி மாஃபியா பட்டம் புகழ்பெற்ற அளவுக்கு ஜெ மீதான ஊழல்ராணி பட்டம் புகழ்பெறவில்லை. இருவரும் அதிமுக குட்டைக்குள் இருந்தாலும் ஜெ மட்டும் நேர்மையானவர் ஆனால் சசிகலா மோசமானவர் என்று பார்ப்பனர்கள் பொதுவெளியில் உருவாக்கிய கருத்து அந்தக் கட்சிக்குள் நடந்த ஆரியர்-திராவிடர் முரண்பாட்டின் ஒரு மெல்லிய இழை!
இப்போது, அதிமுகவின் மிகப்பெரும்பகுதி பொறுப்பாளர்கள் சசிகலாவின் தலைமையை ஏற்கத் தயார். ஆனால், பார்ப்பனர்களுக்கு சசிகலாவோடு ஒவ்வாமை இருக்கிறது. பார்ப்பனர்-பார்ப்பனரல்லாதார் பிரச்சினை பற்றியெல்லாம் சசிகலாவுக்கு இதுவரை போதிய அளவு தெரிவதற்கு வாய்ப்பில்லாமல் போயிருந்தாலும், இனி கண்டிப்பாக அவருக்கு தெரியவரும்!
தீபாவை முன்னிலைப்படுத்தும் பார்ப்பனர்கள் அதன் மூலம் என்ன செய்ய விரும்புகிறார்கள் என்பதில்தான் அவர்களின் முயற்சிக்கான விடை அடங்கியிருக்கிறது. தீபாவை அவர்களால் இங்கே ஒரு தலைவராக உருவாக்கி நிலைநிறுத்த முடியாது. அது கஷ்டம் என்பது அவர்களுக்கே தெரியும்.
அவர்களின் நோக்கம், தீபா மூலம் தங்களின் bargaining powerஐ அதிகரித்துக் கொள்ள வேண்டும். அந்த powerஐ கொண்டு சசிகலாவோடு negotiate செய்துகொள்ள முயற்சிப்பார்கள். அதன் மூலம், பார்ப்பனர்கள் தங்களுக்கான பாதுகாப்பை, தங்கள் அரசியலை தமிழகத்தில் உறுதிசெய்துகொள்ள பார்ப்பார்கள்.
தமிழகம் முழுவதும் ஒட்டப்படும் தீபா ஆதரவு போஸ்டர்களை பார்ப்பனக் கைக்கூலி முகமூடிகள் தான் ஒட்டிவருகின்றனர் என்று சந்தேகிக்கலாம். இது பார்ப்பனர்களின் பேரம்பேசும் வலிமையை அதிகரிக்கும் என்று அவர்கள் நம்புகிறார்கள் முகநூல் பதிவு பிரகாஷ் ஜெ பி

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக