முதல்வரை படுத்திய தம்பிதுரை :
டில்லியில் முட்டல் மோதல்
பிரதமரை சந்திக்க டில்லி சென்ற, முதல்வர் பன்னீர்செல்வம்,
'சசிகலா சொல்லியபடி செயல் படவில்லை' என்ற கோபத்தில், லோக்சபா துணை
சபாநாயகர் தம்பிதுரை, பாதியில் வெளி யேறிய சம்பவம் நடந்துள்ளது.
நடந்த முட்டல்,மோதல்கள் குறித்து, அ.தி.மு.க., வட்டாரம் கூறியதாவது:ஜெயல
லிதா மறைவை தொடர்ந்து, முதல்வராக, எடப் பாடி பழனிச்சாமியை தேர்வு செய்ய,
சசிகலா மற்றும் அவரது குடும்பத்தினர் விரும்பினர். ஆனால், மத்திய அரசு,
இரு முறை முதல்வராக இருந்த பன்னீர்செல்வத்தை, முதல்வராக நியமிக்க
அறிவுறுத்தியது. அதனால், பன்னீர் செல்வம் மீண்டும் முதல்வரானார். >எதிர்பார்ப்பு :
அவர்,
ஜெயலலிதாவிடம் விசுவாசமாக இருந் தது போல், சசிகலாவிடமும் விசுவாசமாக
இருக்கிறார். பொதுச்செயலர் பதவிக்கு, சசிகலா வருவதை வரவேற்றார்.
சென்னை,ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் வரை, முதல்வராக பன்னீர் செல்வம்
தொடர்வார்; பொதுச்செயலராக, சசிகலா தேர்வு செய்யப்படுவார் என,
எதிர்பார்க்கப்பட்டது.
;இந்நிலையில்,சென்னை,காஞ்சிபுரம், திருவள் ளூர் மாவட்டங்களில், 'வர்தா' புயலால் பெரும் பாதிப்பு ஏற்பட்டது. மீட்பு மற்றும் நிவாரண பணியில், முதல்வர் பன்னீர்செல்வகம் வேகம் காட்டினார்.
மாவட்டத்திற்கு, ஆறு அமைச்சர்கள் மற்றும் அதி காரிகள் இடம் பெற்ற குழுவை நியமித்து, பணி களை துரிதப்படுத்தினார். அவரும் நேரடியாக சென்று,மக்களுக்கு நிவாரண உதவி கள் வழங்கினார்.
இதனால், முதல்வர் பன்னீர் செல்வத்திற்கு, மக்களிடம் ஆதரவு பெருகியது;சமூக வலைதளங் களில், அவரை புகழ்ந்து தள்ளினர்.சசிகலா பொது செயலராவதை விரும்பாதவர்கள், பன்னீர்செல் வத்திற்கு ஆதரவளித்தனர். இது, சசிகலா தரப்பின ருக்கு எரிச்சலை ஏற்படுத்தியது.
எனவே, சசிகலா, முதல்வர் பதவியை ஏற்க வலி யுறுத்தி, தீர்மானம் நிறைவேற்றும்படி, அ.தி.மு.க., வில் உள்ள அணிகள் அறிவுறுத்தப்பட்டன. இச் சூழ்நிலையில், பிரதமரை சந்தித்து,புயல் நிவாரண நிதி கோரி மனு கொடுப்பதற்காக, பன்னீர் செல்வம், 19ம் தேதி டில்லி சென்றார். பிரதமர் சந்திப்பின் போது உடன் இருக்கும்படி, தம்பிதுரை யிடம் சசிகலா கூறியிருந்தார்; மேலும், சில ஆலோசனைகளையும் கூறியிருந்தார்.
அதன்படி, டில்லி சென்ற முதல்வரை, விமான நிலையத்தில் தம்பிதுரை வரவேற்றார்;பிரதமரை சந்தித்த போதும் உடனிருந்தார். பிரதமரிடம், 25 நிமிடங்கள் பேசிய முதல்வர், தமிழகத்திற்கு எந்த திட்டங்களுக்கு, நிதி வேண்டும் என்ற பட்டியலை அளித்தார்.
அப்போது, சசிகலா பெயரை எங்கும் பயன் படுத்த வில்லை. அ.தி.மு.க.,வில் எதை செய்தாலும், 'அம்மா' என, ஜெயலலிதா பெயரை முன்னி றுத்துவது வழக்கம். அவர் இல்லாத நிலையில், 'சின்னம்மா' என, சசிகலா பெயரை, பன்னீர் செல்வம் உச்சரிக்க வேண்டும் என, தம்பித் துரை எதிர்பார்த்தார். ஆனால், அவர் அப்படி சொல்லாததால், அதிருப்தி அடைந்தார்.
மேலும், பிரதமர் சந்திப்பு முடிந்த பின், 'பத்தி ரிகையாளர்களை சந்திக்க வேண்டாம்' என, தம்பிதுரை கூறினார்; அதை ஏற்க மறுத்து, முதல்வர் பேட்டி அளித்தார்.
இதனால், கோப மடைந்த தம்பிதுரை, முதல்வரிடம் சொல்லா மல், தன் காரில் ஏறி போய் விட்டார்; முதல் வரை வழியனுப்பவும் வரவில்லை.
பன்னீர்செல்வம், தனியாக பத்திரிகையாளர் களை சந்தித்து, அவர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்தார். 'சசிகலா, முதல்வர் பொறுப்பு ஏற்க வேண்டும் என, ஒரு அமைச்சர் கோரிக்கை வைத்துள்ளாரே' என்ற கேள்விக்கு மட்டும் பதில் அளிக்க மறுத்து விட்டார். இவ்வாறு அந்த வட்டாரம் கூறியது. தினமலர்

வழியனுப்ப வரவில்லை

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக