சென்னை காவேரி மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த திமுக தலைவர் கலைஞர், இன்று மாலை டிஸ்சார்ஜ் ஆகி வீடு திரும்பினார்.
இதுகுறித்து காவேரி மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கையில், ’’கலைஞர் தொண்டை, நுரையீரல் தொற்று முழுவதுமாக குணமடைந்ததால் அவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். கலைஞர் முழு ஓய்வில் இருக்க வேண்டியிருப்பதால் பார்வையாளர்கள் அவரை பார்க்க வருவதை தவிர்க்க வேண்டும். தொண்டையில் பொருத்தப்பட்டுள்ள சுவாச கருவி சில வாரங்கள் இருக்க வேண்டியுள்ளது. வீட்டிலேயே கலைஞரின் உடல்நிலையை காவேரி மருத்துவமனை தொடர்ந்து கண்காணிக்கும்’’ என்று தெரிவித்துள்ளது நக்கீரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக