
எனவே, இந்திய அரசு சங்கரமூர்த்தியை தமிழ்நாட்டு ஆளுநராக அமர்த்தும் திட்டத்தைக் கைவிட வேண்டுமென்று, தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் சார்பில் கேட்டுக் கொள்கிறேன். அத்துடன், கட்சி வேறுபாடின்றி தமிழ்நாட்டு கட்சிகளும் உழவர் அமைப்புகளும் கர்நாடக பா.ச.க. தலைவர் சங்கரமூர்த்தியை தமிழ்நாட்டு ஆளுநராக அமர்த்தும் திட்டத்தை எதிர்த்து உரிமைக்குரல் எழுப்புமாறும் கேட்டுக் கொள்கிறேன்.
தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ. மணியரசன் அறிக்கை!: ’’கர்நாடகத்தின் பா.ச.க. தலைவர்களில் ஒருவராகவும், கர்நாடக சட்ட மேலவையின் தலைவராகவும் இருக்கின்ற டி.எச். சங்கரமூர்த்தி, தமிழ்நாட்டு ஆளுநராக அமர்த்தப்படுவார் என்று செய்திகள் வந்துள்ளன. அண்மையில், உச்ச நீதிமன்றம் தமிழ்நாட்டிற்கு காவிரி நீர் திறந்துவிட ஆணையிட்டபோது, அதை எதிர்த்து பெங்களூரில் - சட்டமன்றம் மற்றும் சட்டமேலவை கூட்டுக் கூட்டம் 23.09.2016 அன்று நடந்தது. அக்கூட்டத்தில் உச்ச நீதிமன்றத் தீர்ப்பை செயல்படுத்த முடியாது என்ற தீர்மானத்தை வழிமொழிந்தவர், இதே சங்கரமூர்த்தி ஆவார். இந்திய அரசமைப்புச் சட்டத்தைப் பாதுகாப்பேன் என உறுதியெடுத்துக் கொண்டு, பா.ச.க. சார்பில் ஏற்கெனவே அமைச்சராக இருந்ததுடன், இப்போது சட்டமேலவைத் தலைவராகவும் இருக்கின்ற சங்கரமூர்த்தி, உச்ச நீதிமன்றத் தீர்ப்பை செயல்படுத்த முடியாது என்ற தீர்மானத்தை வழிமொழிந்தது – இந்திய அரசமைப்புச் சட்டத்திற்கு எதிரான செயலாகும்! நக்கீரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக