சனி, 24 டிசம்பர், 2016

உச்சநீதிமன்றம் சவால் : தமிழர்களே காளைகளுக்கு பதில் சிங்கங்களை தருகிறோம் அடக்குகிறீர்களா?

காளைகளுக்கு பதில் சிங்கங்களை தருகிறோம் அடக்குகிறீர்களா தமிழர்களே…? உச்சநீதிமன்றம் இப்படி ஒரு கருத்தைக் கூற பத்தி எரிகிறது முக நூல்மற்றும் சமூகவலைத் தளங்கள். முக நூல் போராளிகள் கொந்தளித்து விட்டார்கள். சம்பளத்தை விட ரெண்டு மடங்கு பணம் தந்தால் நீங்கள் சாப்பிடாமல் இருக்கிறீர்களா..?? செய்வீர்களா கணம் நீதிபதி அவர்களே! சேகரன் என்கிற முகநூல் பதிவர் தனது பதிவில் சிங்கத்துக்கு ஒரு கிலோ கறி இருந்தால் போதும் அடங்கி விடும் காளைகள் எதற்கும் அடங்காது. நீயா? நானா? வா மோதிப் பார் என்று நம்மை முறைத்து எதிர் கொள்ளும். சர்க்கஸ் களில் கூட சிங்கத்தை அடித்து, அடக்கி ஆள்வார்கள்.
ஆனால், சர்க்கஸ் ட்ரெயினருக்கும் அடங்காதது காங்கேயம் காளைகள். நீதிபதிகள் கொஞ்சம் தமிழர் வரலாற்றை படிக்க வேண்டும். ஏ.சி காருக்குள் பயணிப்பவர்களுக்கு தமிழரின் வீரம் பற்றி என்ன தெரியும்? என்று காட்டத் தோடு கேட்கிறார். உண்மையில் யோசித்துப் பார்த்தால் உச்ச மன்ற நீதிபதிளுக்கு மாநில மக்களின் வாழ்க்கை முறை தெரியவே தெரியாதா..? தெரிய வேண்டும். நீதிபதிகள் இந்த நாட்டின் கண்கள். அவர்களுக்கு இந்திய குழந்தைகள் ஒவ்வொருரின் தனித்துவங்கள்,உணர்வுகள்,கலாச்சாரம்,பழக்க வழக்கங்கள் இவையெல்லாமே அவர்கள் தெரிந்திருக்க வேண்டும். நீதிபதிகள் நீதித்தாயின் பிள்ளைகள் அல்லவா? நெறி வழுவாது நீதி வழங்க வேண்டுமல்லாவா?  லைவ்டே


கருத்துகள் இல்லை: