சென்னை: எம்.ஜி.ஆர். மறைந்தபோது இருந்த நிலையில் இப்போது ஜெயலலிதாவுக்குப் பிந்தைய அதிமுக இல்லை. கட்சி உடையவில்லை. ஆட்சியும் நீடிக்கிறது. இதற்கான காரணங்களை சற்று உற்று நோக்கிப் பார்த்தால் இரண்டே காரணத்திற்காகத்தான் கட்சி உடையாமல் சசிகலா பின் நிற்பதை உணர முடியும்.
அது பணம் மற்றும் பதவி. இந்த இரண்டு காரணங்களுக்காக மட்டுமே ஆட்சியும் கவிழாமல் உள்ளது, சசிகலா பின்னால் அத்தனை அமைச்சர்கள், தலைவர்கள், பெரும்பாலான நிர்வாகிகள் வரிசை கட்டி நிற்கக் காரணம்.
பதவியில் உள்ளவர்கள் மட்டுமல்லாது பதவியில் இல்லாதவர்களும் கூட சசிகலா முன்பு பெரும் கியூவில் காத்துக் கிடக்கின்றனர். சின்னம்மா சின்னம்மா என்று உருகிக் கொண்டுள்ளனர். சசிகலாவை பார்த்து கன்னத்தில் போட்டுக் கொண்டு சாமி கும்பிடுவது மாதிரி நடிப்பை போடுகிறார்கள்.
ஆச்சரியப்பட எதுவும் இல்லை
ஆச்சரியப்பட எதுவும் இல்லை
ஜெயலலிதாவுக்குப் பின் கட்சியில் பிளவு வரும் என்றுதான் பலரும் நினைத்திருந்தனர். ஒதுக்கி வைக்கப்பட்ட தலைவர்கள் தலை எடுப்பார்கள் என கருதப்பட்டது. ஆனால் அப்படி நடக்கவில்லை.
குறைந்தபட்சம் தற்போதைக்கு அதற்கான வாய்ப்பும் இல்லை. ஆனால் இதில் ஆச்சரியப்படவும் எதுவும் இல்லை. பணம் பத்தும் செய்யும் பணம் பத்தும் செய்யும் இதற்கான காரணத்தை அறிய மண்டையை உடைத்துக் கொள்ளத் தேவையே இல்லை. உள்ளங்கை நெல்லிக்கனி போல படு எளிதாக காரணத்தை அறியலாம். பணம் மற்றும் பதவி ஆகிய இரண்டுக்காக மட்டுமே இந்த ஆட்சியும், கட்சியும் இன்னும் சீர்குலையாமல் உள்ளது என்பதே உண்மையான காரணம். நாலரை வருடத்திற்குள் நாலரை வருடத்திற்குள் இன்னும் நாலரை வருடகாலம் அதிமுக ஆட்சியை காப்பாற்றிக் கொண்டு முடிந்த வரை ஆட்டையைப் போடுவது தான் இப்போதைய இவர்களது இலக்கு என்கின்றனர் நொந்து போயுள்ள அதிமுக தொண்டர்களில் சிலர். ஜெயலலிதா இல்லை, சசிகலாவுக்கு ஜால்ரா போட்டால் மட்டும் போதும்.. நாலரை வருடத்தில் என்னென்ன சாதிக்கலாம்... நமக்கே எவ்வளவு கற்பனைகள் வருகிறது.. பதவியில் உள்ளவர்களுக்கு அது எந்த அளவுக்கு இருக்கும்... இதுதான் அதிமுக ஆட்சியுடன் தொடர்புடையவர்கள் சசிகலா பின் அணிவகுக்க முக்கியக் காரணம். பணம்.. பணம்.. பணம் பணம்.. பணம்.. பணம் ஜெயலலிதா காலத்திலேயே அதிமுக அமைச்சர்களும், தலைவர்களும், நிர்வாகிகளுக்கும் பல தலைமுறைக்குச் சொத்து சேர்த்து விட்டனர் என்பதை சொல்லி விளக்க வேண்டியதில்லை. அதை தற்போது கட்டுக் கோப்பாக கட்டிக் காக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். இதற்காகவே சசிகலா முன்பு அத்தனை பேரும் தாழ் பணிந்து நிற்கின்றனர். அது அவர்களுக்கு கஷ்டமானதும் கிடையாது, பழக்கமான ஒன்றுதான். பதவி பலம் பதவி பலம் பதவியில் இருக்கும் பட்சத்தில் மட்டுமே சேர்த்து வைத்ததைக் காக்க முடியும். புதிதாகவும் சேர்க்கவும் முடியும். இது அதிமுக முக்கியஸ்தர்கள் சசிகலாவை "ஒருமனதாக" ஆதரிக்க முக்கியக் காரணம். சசிகலாவுக்கு சலாம் போட்டு விட்டு, பதவியில் நீடிப்பதன் மூலம் அடுத்த நாலரை வருடத்திற்குள் முடிந்தவரை சம்பாதித்துக் கொள்ளலாம் என நினைக்கின்றனர் என்கின்றனர் அந்தக் கட்சியின் சில தொண்டர்கள். பதவியைப் பிடிக்க இன்னொரு குரூப் பதவியைப் பிடிக்க இன்னொரு குரூப் இது பதவியில் உள்ளவர்களின் பிரச்சினை என்றால் பதவியில் இல்லாதவர்களும் சசிகலா முன்பு அடி பணிந்து நிற்க இதே பணமும், பதவியும்தான் காரணமாக உள்ளது. மீண்டும் கட்சியில் பதவிகளைப் பிடித்து அடுத்த நாலரை ஆண்டு காலத்தில் முடிந்தவரை சுருட்டலாம் என்பதே இவர்களின் முக்கிய நோக்கம் என்கின்றனர் நடப்பதை எல்லாம் வெறுத்துப் போய் பார்த்து வரும் தொண்டர்கள்.tamiloneindia

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக