புதன், 21 டிசம்பர், 2016

துணை ராணுவப்படை ... தமிழக காவல் துறையில் நம்பிக்கை இழந்த வருமானவரி துறை

minnambalam.com வருமான வரித்துறையினர் சோதனை நடத்திவரும் தமிழக தலைமைச் செயலாளர் ராம்மோகன் ராவ் இல்லம் மற்றும் தலைமைச் செயலக அலுவலகத்தில், ஆயுதம் ஏந்திய துணை ராணுவப் படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், மத்திய அரசு எதற்காக துணை ராணுவத்தை வரவழைத்தது என்ற கேள்வி அனைவர் மனதிலும் எழுந்ததோடு, அது அச்சத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியிருக்கிறது. இந்நிலையில், இதுகுறித்து சிபிஐ முன்னாள் அதிகாரி ரகோத்தமன் செய்தியாளர்களிடம் விளக்கமளித்திருக்கிறார். ‘ஒரு முக்கிய அல்லது அதிகாரம் மிக்கவர் வீட்டில், அலுவலகத்தில் சோதனை நடத்தும்போது வருமான வரித்துறையினர் இதுபோன்ற நடவடிக்கையை மேற்கொள்ளலாம். தமிழக தலைமைச் செயலாளர் வீட்டில் சோதனை நடத்தும்போது, அவர் கட்டுப்பாட்டில் தமிழக காவல்துறை இருக்கும் என்பதால், துணை ராணுவப் படை வரவழைக்கப்பட்டுள்ளது.
மேலும் சில முக்கிய நபர்களின் இடங்களில் சோதனை நடத்தும்போது ஆதாரங்களை அழிக்கவோ அல்லது வருமான வரித்துறை அதிகாரிகள் கைப்பற்றிய ஆவணங்களை வெளியே எடுத்துச் செல்லும்போதோ, வீட்டின் வெளியே நிற்கும் தொண்டர்களோ அல்லது சம்பந்தப்பட்ட ஆதரவாளர்களோ அதை பிடுங்கவோ, அபகரிக்கவோ முயற்சிக்கலாம். அதுபோன்ற சம்பவத்தை தவிர்க்கவே, துணை ராணுவப் படையினர் வரவழைக்கப்படுவார்கள்’ என்றார்.

கருத்துகள் இல்லை: