சென்னை: அதிமுக பொதுக்குழு வரும் 29-ந் தேதி கூடுகிறது என தகவல்கள் வெளியாகி உள்ளன. இப்பொதுக் குழு கூட்டத்தில் அதிமுகவின் பொதுச் செயலராக சசிகலா நடராஜன் தேர்வு செய்யப்படக் கூடும் எனவும் கூறப்படுகிறது.
ஜெயலலிதா மறைவைத் தொடர்ந்து முதல்வராக ஓ. பன்னீர்செல்வம் பொறுப்பேற்றார். ஜெயலலிதா வகித்து வந்த அதிமுக பொதுச்செயலர் பதவி யாருக்கு என்ற கேள்வி எழுந்தது.
முதல்வர் ஓ. பன்னீர்செல்வமே அதிமுக பொதுச்செயலராவார் எனக் கூறப்பட்டது. ஆனால் திடீரென ஜெயலலிதாவின் தோழி சசிகலா தம்மை அதிமுக பொதுச்செயலராக்கும் முயற்சியில் இறங்கினார்.
நாள்தோறும் அதிமுக நிர்வாகிகள், ஜாதி சங்கங்களின் நிர்வாகிகள் பலரும் போயஸ் கார்டனுக்கு வரவழைக்கப்பட்டு சசிகலாவிடம் நீங்களே பொதுச்செயலராகுங்கள் என கோரிக்கை விடுக்கும்படி சொல்ல வைக்கப்படுகின்றனர். இந்த நிலையில் அதிமுகவின் பொதுக்குழு வரும் 29-ந் தேதி சென்னையில் நடைபெறும் என அக்கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இந்த பொதுக்குழுவில் சசிகலா அதிமுகவின் பொதுச்செயலராக தேர்வு செய்யப்படக் கூடும் என தெரிகிறது. அதே நேரத்தில் சசிகலா எதிர்ப்பு அணியினர் அதே நாளில் பகிரங்கமாக போர்க்கொடி தூக்குவர் எனவும் கூறப்படுகிறது.tamiloneindia
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக