புதன், 21 டிசம்பர், 2016

நாஞ்சில் சம்பத் ஸ்டாலின் அடியாளாக அவதாரம் ... ? கர்மம் கர்மம் ..

நாஞ்சில் சம்பத் அரசியலை விட்டே வெளியேறப் போவதாக சமூக வலைத்தளங்களில் செய்தி பரவிய நிலையில், அவர் திமுகவில் இணையப்போவதாக டி.வி ஊடகங்கள் மற்றும் சமூகவலைதளங்களில் செய்திகள் பரவி வந்தன. ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அவரது தோழி சசிகலாவை அதிமுக பொதுச்செயலாளராக்க தீவிர முயற்சிகள் நடந்து வருகிறது. அதிமுக அமைச்சர்கள், மூத்த நிர்வாகிகள் உள்பட பலர் சசிகலாவுக்கு தங்களது ஆதரவை தெரிவித்துள்ளனர். இந்த நிலையில், நாஞ்சில் சம்பத் கருத்து ஏதும் தெரிவிக்கவில்லை. இதனால், அரசியலில் இருந்து நாஞ்சில் சம்பத் ஓய்வு பெறப்போவதாகவும் ஒரு வதந்தி சமூக வலைத்தளங்களில் பரவியது. ஆனால், சம்பத் நண்பர்களோ.. அவர் அரசியலில் இருந்து விலகும் பேச்சுக்கே இடம் இல்லை. அதே சமயம் திராவிடப் பாரம்பரியத்தில் ஊறியவர் நண்பர் சம்பத். அண்ணாவையும், கலைஞரையும், அம்மாவையும் தலைவராக ஏற்றுக் கொண்ட அவர் சசிகலாவை தலைவியாக ஏற்றுக் கொள்ள மாட்டார். எனவே, தளபதியின் நிழலில் ஒதுங்கப் போகிறேன். சாகும் வரை திமுக போதும் என்று கண் கலங்க கூறினார் என்கிறார்கள்.
மேலும், திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலினிடம் திமுகவில் இணைவது குறித்து பேசியதாகவும், அதற்காக தேதி கேட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. தனது ஆதரவாளர்கள் நான்கு லட்சம் பேருடன் தளபதி முன்னிலையில் விரைவில் திமுகவில் ஐக்கியமாவார் என்கிறார்கள்..! சம்பத் இனி அதிமுகவை ஒரு பிடி பிடிப்பார்?  லைவ்டே


கருத்துகள் இல்லை: