மாற்றுத்திறனாளிகள் இந்த சட்ட திருத்தத்தில், 5 சதவீதத்திற்கும் குறையாத அளவுக்கான பணியிடங்கள், கன்னட மாற்றுத் திறனாளிகளுக்கு ஒதுக்கப்பட வேண்டும் என்ற ஷரத்தும் சேர்க்கப்பட உள்ளதாக பி.டி.ஐ செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தியொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சலுகை பெறும் நிறுவனங்களுக்கு மட்டும் "கர்நாடக அரசிடம், நிலம், நீர், மின்சாரம் அல்லது வரி சலுகை பெறும் அனைத்து தனியார் நிறுவனங்களும், கன்னடிகர்களுக்கு 100 சதவீதம் வேலை வாய்ப்பையும் வழங்க வேண்டும்" என்ற ஷரத்து சட்ட திருத்தத்தில் இடம் பெற்றிருப்பதாக அரசு அறிவிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐடி, பிடி தப்பியது அதேநேரம், தகவல் தொழில்நுட்பம் (ஐடி), உயிரி தொழில்நுட்பம் (பிடி), புதிய தொழில் முனைவோர், அறிவுசார் தொழில் நிறுவனங்களுக்கு இந்த விதிமுறையிலிருந்து விலக்கு அளிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரம், இந்த நிறுவனங்களுக்கான விதி விலக்கு சட்ட திருத்தம் அமலுக்கு வந்த பிறகு அதிகபட்சமாக 5 வருடங்களுக்கு மட்டுமே அமலில் இருக்கும் என்று கூறப்படுகிறது. கன்னடர் என்றால் யார்? அரசு அறிவிக்கைப்படி, கன்னடர் என்பவர் யார் என்பதும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கர்நாடகாவில் பிறந்த அல்லது, கர்நாடகாவில் 15 ஆண்டுகளுக்கு குறையாமல் வசிக்கும் நபர் கன்னடர் என கருதப்படுவார். அந்த நபருக்கு கன்னடம் புரிய, பேச, வாசிக்க மற்றும் எழுதவும் தெரிந்திருக்க வேண்டும்.
அரசிதழில் வெளியிட மும்முரம் அரசு இந்த அறிவிக்கையை தற்போது மக்களின் கருத்து கேட்பதற்காக பொதுவெளியில் விட்டுள்ளது. இதன்பிறகு, அரசிதழில் அறிவிக்கை வெளியிடப்பட்டால் அதன்பிறகு விதிமுறை அமலுக்கு வந்துவிடும் என்று கூறப்படுகிறது. பிறகு 6 மாதத்திற்குள் சட்டத்தில் திருத்தம் செய்துகொள்ளலாம் கர்நாடக அரசு.
அமைச்சர் விளக்கம் : இந்த சட்டத் திருத்தம் குறித்து கர்நாடக தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சந்தோஷ் லாட் கூறுகையில், பிற மாநில ஊழியர்கள் பீதியடைய தேவையில்லை. குரூப் சி, டி ஆகிய 'ஃப்ளூ காலர் ஜாப்'களுக்குத்தான் விதிமுறை பொருந்தும். ஏற்கனவே 90 சதவீதம் அளவுக்கு இந்த பணியிடங்களில் கன்னடர்கள் உள்ளனர். அவர்களை 100 சதவீதம் அளவுக்கு உயர்த்துவது சட்டத் திருத்தத்தின் நோக்கம்.
ஒருவேளை இப் பணியிடங்களுக்கு தகுதி வாய்ந்த கன்னடர்கள் கிடைக்காவிட்டால் அந்த காரணத்தை காண்பித்து, பிற மாநில தொழிலாளர்களை பணிக்கு அமர்த்த தனியார் நிறுவனங்களுக்கு அனுமதி உண்டு. இவ்வாறு சந்தோஷ் லாட் தெரிவித்தார் tamiloneindia
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக