வெள்ளி, 23 டிசம்பர், 2016

தொலைக்காட்சிகளில் வயது வந்தவர்கள் மட்டும் பார்க்ககூடிய நிகழ்சிகள்?

Height of stupidity: S.Ve. Sheker slams a TV programme  A certified 🎥 films not allowed inTelevision.straight A Uncertified topics allowed!!!! Height of Stupidity.
சென்னை: ஏ சான்றிதழ் படங்களை தொலைக்காட்சியில் ஒளிபரப்ப அனுமதி இல்லை. ஆனால் சான்றிதழ் பெறாத ஏ வகையான நிகழ்ச்சிகளுக்கு மட்டும் அனுமதி என நடிகர் எஸ்.வி. சேகர் தெரிவித்துள்ளார்.
தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் குடும்ப பஞ்சாயத்து நிகழ்ச்சிகளுக்கு எதிராக நடிகைகள் ஸ்ரீப்ரியா, ரஞ்சனி ஆகியோர் தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார்கள். குடும்ப பஞ்சாயத்து நிகழ்ச்சிகளுக்கு தடை விதிக்க வேண்டும் என்று கூறிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு ரசிகர்களின் ஆதரவு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

இந்நிலையில் நடிகர் எஸ்.வி. சேகர் வேறு ஒரு நிகழ்ச்சி பற்றி ட்விட்டரில் விமர்சனம் செய்துள்ளார். அவர் ட்விட்டரில் கூறியிருப்பதாவது,
ஏ சான்றிதழ் படங்களை தொலைக்காட்சியில் ஒளிபரப்ப அனுமதி இல்லை. ஆனால் சான்றிதழ் பெறாத ஏ வகையான நிகழ்ச்சிகளுக்கு மட்டும் அனுமதி. முட்டாள்தனத்தின் உச்சம் என தெரிவித்துள்ளார்.
எஸ்.வி. சேகர் விமர்சித்திருப்பது கேப்டன் டிவியில் ஒளிபரப்பாகும் சமையல் மந்திரம் நிகழ்ச்சி என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை: