மும்பையின் அரேபியக் கடலில் மாமன்னன் சத்ரபதி சிவாஜி நினைவிடத்தை 3600 கோடி ரூபாய் செலவில் மகாராஷ்டிரா அரசு அமைக்கவுள்ளது. 15 ஏக்கர் பரப்பளவில் 210 மீட்டர உயரத்தில் அரபிக் கடற்கரையில் இருந்து 1.5 கிலோமீட்டர் தொலைவில் இந்த நினைவிடம் அமையவிருக்கிறது.
மொத்தமாக இந்த நினைவிடத்தை உருவாக்க 3600 கோடி ரூபாய் செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது.இந்தத் திட்டத்துக்கு அடிக்கல் நாட்டும் விழா வருகின்ற டிசம்பர் 24-ம் தேதி நடைபெறுகிறது. இதில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு திட்டத்துக்கு அடிக்கல் நாட்டுகிறார்.
நாங்கள் ஆட்சிக்கு வந்தால் சத்ரபதி சிவாஜிக்கு நினைவிடம் அமைப்போம் என மகராஷ்டிர முதல்வர் தேவேந்திர பட்நாவிஸ் தனது தேர்தல் அறிக்கையில் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.மாலைமலர்.கம
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக