ரெய்டுகள்
வெளியில் நடந்த நிலையில் அது தலைமைச் செயலகத்திற்குள்ளே நடக்கும் என்பதை
முதல்வர் பன்னீர் செல்வமோ, அமைச்சர்களோ எதிர்பார்க்கவில்லை. நேற்று முன்
தினம் (21-12-2016) தலைமைச் செயலகத்தில் ரெய்டு நடந்த போது முதல்வர்
பன்னீர் அலுவலகத்தில் அமைச்சர்கள் எடப்பாடி பழனிசாமி, தங்கமணி,வேலுமணி,
சின்னசாமி, விஜயபாஸ்கர், கூடி ஆலோசனை நடத்திக் கொண்டிருந்தார்கள்.
நள்ளிரவையும் கடந்து ரெய்டு தொடர்ந்த நிலையில் , மாலை வரை அச்சத்தோடு
பேசிக் கொண்டிருந்தவர்கள் மாலைக்குப் பிறகு கலைந்து சென்றார்கள்.
தலைமைச்
செயலகத்தில் ரெய்டு தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருந்தபோது முதலமைச்சரின்
அறையில் நள்ளிரவு வரை முதல்வர் பன்னீர் அதிகாரிகளுடன் ஆலோசனை
நடத்தினார்.அதன் பின்னரே முதல்வர் தனது வீட்டிற்கு கிளம்பிச் சென்றுள்ளார்.
ரெய்டு உருவாக்கிய அச்சம் அமைச்சர்களையும் அவருக்கு வேண்டியவர்களிடமும் கடும் பீதியை உருவாக்கியிருக்கிறது. மின்னம்பலம்
ரெய்டு உருவாக்கிய அச்சம் அமைச்சர்களையும் அவருக்கு வேண்டியவர்களிடமும் கடும் பீதியை உருவாக்கியிருக்கிறது. மின்னம்பலம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக