வெள்ளி, 23 டிசம்பர், 2016

வெங்கையா நாயுடு: பன்னீர்செல்வத்துக்கே ஆதரவு! .. இதுக்கு மேலே விளக்கம் தேவையில்லை? பிளாக் மெயில்...?



ஜெயலலிதா மரணத்தின் பின்னர் அதிமுக தலைமையிலும், தமிழக அரசியல் தளத்திலும் வெற்றிடம் ஏற்பட்டுள்ளதாக பாஜகவினரும் வேறு சில பார்வையாளர்களும் கூறி வரும் நிலையில் தமிழக அரசையும் ஆளும் அதிமுகவையும் பாஜக கைப்பற்ற அல்லது கட்டுப்படுத்த நினைக்கிறது என்று ஒரு கருத்து நிலவி வரும் நிலையில்,முதல்வர் பன்னீர் செல்வத்திற்கே மத்திய அரசு ஆதரவு உண்டு என்று மூத்த மத்திய அமைச்சர் வெங்கய்யா நாயுடு தெரிவித்துள்ளார். அதிமுகவில் தற்போது ஏற்பட்டுள்ள குழப்பத்தையடுத்து தமிழக அரசை பாஜக மறைமுகமாக கைப்பற்ற திட்டமிட்டுள்ளது என்று கூறப்படும் நிலையில் முதல்வர் பன்னீர் செல்வத்திற்கே மத்திய அரசு ஆதரவு உண்டு என்று மத்திய அமைச்சர் வெங்கய்யா நாயுடு வலியுறுத்தி யார் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர்? அவர் திரு.பன்னீர்செல்வம்தான். பன்னீர் செல்வத்தைதான் மேடம் ஜெயலலிதா ஏற்கனவே முதல்வராக தேர்ந்தெடுத்தார் . அதுதான் அதிமுக கட்சியின் விருப்பம். பன்னீர் செல்வம்தான் தமிழக முதல்வர். எனவே அவரோடுதான் மத்திய அரசு தொடர்பு கொண்டு வருகிறது. தமிழகத்திற்கு தேவைப்படும் அனைத்து உதவிகளையும் மத்திய அரசு வழங்கும்.
அரசு பொறுப்பில் தொடர்பில்லாதவர்களிடம் தொடர்பு கொண்டு பேசுவதற்கு மத்திய அரசுக்கு ஒன்றும் அவசியமில்லை புயலால் பாதிப்படைந்த தமிழகத்திற்கு மத்திய குழுவினரின் ஆய்வறிக்கையின் பேரில் நிவாரண உதவித் தொகை விரைவில் வழங்கப்படும் என்று வெங்கய்யா நாயுடு கூறினார். மின்னம்பலம்

தெரிவித்துள்ளார்.இது குறித்து வெங்கய்யா நாயுடு இன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: அதிமுக உட்கட்சி விவகாரத்தில் பாஜகவுக்கு அக்கறையில்லை. ஆனால், எங்கள் ஆதரவு தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவருக்குதான் உண்டு. minnambalam.com

கருத்துகள் இல்லை: