"தமிழக அரசின் தலைமைச் செயலாளர் ராமமோகன் ராவ் வீடு
உட்பட 13 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் இன்று காலையிலிருந்தே
சோதனை மேற்கொண்டு வருகின்றனர். அண்ணா நகரில் உள்ள ராமமோகன் ராவ் வீட்டின்
பின்பக்கத்தில் பழைய பொருட்களை குவித்துவைப்பதற்கு ஒரு அறை உள்ளதாம். இந்த
அறையிலிருந்து கோடிக்கணக்கான ரூபாய் பணக்கட்டுகளை கைப்பற்றியிருப்பதாகச்
சொல்கிறார்கள். அதேபோல, அவரது படுக்கையறையில் உள்ள கட்டிலுக்கு அடியில் ஒரு
ரகசிய அறை இருப்பதாகவும், அந்த அறையிலிருந்து தங்க நகைகளும், பணமும்
பிடிபட்டிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.
தலைமைச் செயலகத்தில் உள்ள ராமமோகன் ராவ் அறையிலும் சோதனை நடக்கிறது. அப்போது, அவரது அறையிலிருந்து லேப்டாப் ஒன்றைக் கைப்பற்றியிருக்கிறார்கள். ஆனால் அந்த லேப்டாப்புக்கு பாஸ்வேர்டு போடப்பட்டிருந்ததாம். உடனே வருமான வரித்துறை அதிகாரிகள் தொலைபேசி மூலமாக அண்ணா நகரில் உள்ள அதிகாரிகளைத் தொடர்புகொண்டு, ராமமோகன் ராவிடம் அந்த லேப்டாப்புக்கான பாஸ்வேர்டு என்ன என்பதை கேட்கச் சொல்லியிருக்கிறார்கள்.
அண்ணா நகரில் இருந்த அதிகாரிகள் பாஸ்வேர்டு கேட்டார்களாம். அதற்கு ராமமோகன், 'அது என்னோட பர்சனல்... ' என்று சொல்லியிருக்கிறார். ஆனால் அதிகாரிகளோ, 'ரெய்டுன்னு வந்தபிறகு பர்சனல் எல்லாம் எதுவும் இல்லை. நீங்க சொல்லித்தான் ஆகணும். எங்களை மேலும் அழுத்தம் கொடுக்க வைக்காதீங்க...' என்று கடிந்துகொண்டபிறகே பாஸ்வேர்டு சொல்லியிருக்கிறார். அவர் சொன்ன பாஸ்வேர்டு எழுத்துகளைக் கேட்டதும் அதிகாரிகள் சிரித்திருக்கிறார்கள்.
அதன்பிறகு, ராமமோகன் ராவ் சொன்ன பாஸ்வேர்டை தலைமைச் செயலகத்தில் சோதனையில் ஈடுபட்டிருந்த அதிகாரிகளுக்கு தெரிவித்திருந்தனர். அதைவைத்து, அந்த லேப்டாப் திறக்கப்பட்டுள்ளது. லேப்டாப்பில் பல முக்கிய ஆவணங்கள் இருந்ததாம். அதுமட்டுமல்லாமல், சில புகைப்படங்களும் இருந்ததாகச் சொல்கிறார்கள். 'இந்தப் படத்தையெல்லாம் இவரு எதுக்கு வைச்சிருக்காரு’ என்று, அவர்களுக்கு வருமான வரித்துறை அதிகாரிகள் பேசியிருக்கிறார்கள். அப்படி என்ன படத்தை ராமமோகன் ராவ் வைத்திருந்தார். அதிகாரிகளை சிரிக்கவைத்த அந்த பாஸ்வேர்டின் எழுத்துகள் என்ன என்ற விவரங்கள் எதுவும் வெளியே கசியவில்லை’’ என்று முடிந்தது அந்த மெசேஜ்.
தொடர்ந்து, அடுத்த மெசேஜ் ஒன்றையும் டைப் செய்ய ஆரம்பித்தது வாட்ஸ் அப். ‘இப்படியாக ராமமோகன் ராவுக்குச் சொந்தமான இடங்களில் சோதனை நடந்துகொண்டிருந்த அதே நேரத்தில் முதல்வர் பன்னீர்செல்வத்தின் நண்பர் சேகர் ரெட்டி கைது செய்யப்பட்டார். சி.பி.ஐ. அதிகாரிகள் அவரை கைது செய்தனர். கடந்த வாரத்தில், சேகர் ரெட்டிக்குச் சொந்தமான இடங்களில் நடந்த சோதனையின்போது கைப்பற்றப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில்தான் ராமமோகன் ராவ் வீட்டில் சோதனை நடந்துவருகிறது. இப்படி, தமிழக அரசின் தலைமைச்செயலர், முதல்வர் பன்னீர்செல்வத்தின் நண்பர் சேகர் ரெட்டி என அடுத்தடுத்து நடக்கும் அதிரடிகள் எல்லாம் மத்திய அரசின் காய் நகர்த்தலாகவே சொல்கிறார்கள். பி.ஜே.பி. தமிழகத்தில் ஆழமாகக் காலூன்ற அதிமுக-வுக்கு தொடர்ந்து நெருக்கடிகளைக் கொடுக்க ஆரம்பித்திருப்பதாகவும் சொல்ல ஆரம்பித்துள்ளனர். அதனால், இதில் அடுத்தகட்டமாக முதல்வர் பன்னீர்செல்வம் மற்றும் சில அமைச்சர்களின் வீடுகளில் ரெய்டு நடந்தாலும் ஆச்சரியம் இல்லை’ என்ற மெசேஜுக்கு செண்டு கொடுத்துவிட்டு ஆஃப் லைனில் போனது வாட்ஸ் அப்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக