IS THE
BENAMI QUEEN OF TAMILNADU" என்ற பெயரில் ஆய்வுப்படம் ஒன்றை 'அறப்போர்
இயக்கம்' என்னும் அமைப்பு வெளியிட்டுள்ளது. அதில் மறைந்த முதலமைச்சர்
ஜெயலலிதாவின் தோழி சசிகலா மற்றும் அவருடைய குடும்பத்தை சேர்ந்தவர்கள் 43
நிறுவனங்களுக்கு பினாமியாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜெயலலிதாவுக்கு எதிரான சொத்துக்குவிப்பு வழக்கில் நீதிபதி குன்ஹா அளித்த
தீர்ப்பில் இருந்தும், அறப்போர் இயக்கத்தைச் சேர்ந்த ஆடிட்டர்கள் மற்றும்
வழக்கறிஞர்கள் மேற்கொண்ட ஆய்வின் மூலமும் கூடுதல் தகவல்களை அதில்
இணைத்துள்ளனர்.
நீதிபதி குன்ஹா அளித்த தீர்ப்பில், சசிகலா மற்றும் அவரது உறவினர்கள் 31
நிறுவனங்களுக்கு பினாமியாக இருப்பதாக சொல்லியிருந்தார். எஞ்சிய 12 புதிய
நிறுவனங்கள் குறித்த தகவல்கள் இதில் இடம் பெற்றுள்ளன.சொத்துக்குவிப்பு
வழக்கில் சேர்க்கப்பட்ட நிறுவனங்களில் தொடர்ந்து அதிக அளவில் முதலீடு
செய்யமுடியாது என்பதால், பல புதிய நிறுவனங்களை சசிகலா மற்றும் அவருடைய
குடும்ப உறுப்பினர்கள் தொடங்கியுள்ளதாகவும் இந்தப் படத்தில்
கூறப்பட்டுள்ளது.வெறும் 7 ஏக்கர் நிலத்துக்கு சொந்தக்காரராக இருந்தவர்,
எந்த வேலையும் செய்யாமல் எந்த அலுவலகமும் செல்லாமல் எவ்வாறு பல கோடிகளுக்கு
சொந்தக்காரர் ஆனார். என்பது உள்ளிட்ட பல கேள்விகள் இப்படத்தில்
முன்வைக்கப்பட்டுள்ளன.'பினாமியாக இருந்த சசிகலா, தற்போது அந்த
நிறுவனங்களின் உரிமையாளராக ஆகியுள்ளார்' என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜெயலலிதாவின் தோழியான சசிகலாவை "பினாமி குயின்" என்று குறிப்பிட்டு வெளியிடப்பட்டுள்ள இந்த ஆய்வுப் படம் அறப்போர் இயக்கத்தின் சமூக வலைதளங்களில் பதிவிடப்பட்டுள்ளது. இது முதல்பகுதிதான் என்றும்,தொடர்ந்து இதன் இரண்டாவது மற்றும் மூன்றாவது பகுதிகள் வெளியிடப்படும் என்றும் தெரிவிக்கிறார் அறப்போர் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் ஜெயராம் வெங்டேசன்.
தற்போது முக்கிய பொறுப்புகளில் சசிகலாவை கொண்டு வர முயற்சிகள் நடந்து வருகிறது.எனவே அவரைப்பற்றி பொதுமக்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக தற்போது இதனை வெளியிட்டுள்ளோம் என்றும் அவர் கூறுகிறார்.
அறப்போர் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் ஜெயராம் வெங்டேசன். 'பினாமி குயின்' படம் குறித்து அவர் நம்மிடம் பேசிய வீடியோ இங்கு இணைக்கப்பட்டுள்ளது விஜயஆனந்த் விகடன் ,கம்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக