திடீர் உடல்நலக்குறைவு : ராம மோகன ராவ் மருத்துவமனையில் அனுமதி தமிழக அரசின் முன்னாள் தலைமைச் செயலாளர் ராம மோகன ராவ் சென்னை அருகே போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சென்னை அண்ணா நகரில் உள்ள ராம மோகன ராவ் வீடு, திருவான்மியூரில் உள்ள அவரது மகன் வீடு, ஆந்திர மாநிலத்தில் உள்ள சம்மந்தி வீடு மற்றும் ராம மோகன ராவ் உறவினர்கள் வீடுகளில் வருமான வரித்துறை அதிகாரிகள் திடீர் சோதனை மேற்கொண்டனர். தலைமைச் செயலகத்தில் உள்ள அவரது அலுவலகத்திலும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை
மேற்கொண்டனர்.
தமிழகம், ஆந்திரா, கர்நாடகா ஆகிய 3 மாநிலங்களிலும் மொத்தம் 13 இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடந்தது. 2 நாட்கள் இந்த சோதனை நீடித்தது. இந்த சோதனையில் கணக்கில் வராத பணமும், தங்கமும், பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்து ஆவணங்கள் சிக்கியதாக அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளியானது. ஆனால், சோதனை மேற்கொண்ட வருமான வரித்துறை சார்பில் இதுபற்றி அதிகாரப்பூர்வமான தகவல் எதுவும் இதுவரை வெளியாகவில்லை. ராமமோகன ராவ் வீட்டில் நடந்த சோதனையின் போது, ‘ரகசிய டைரி’ ஒன்று வருமான வரித்துறை அதிகாரிகளிடம் சிக்கியதாகவும், அதில் சில அமைச்சர்கள் மற்றும் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகளின் பெயர்களை அவர் எழுதி வைத்து இருப்பதாகவும் தற்போது தகவல் வெளியாகி உள்ளது. எதுக்கும் ஒருவாட்டிக்கு இரண்டு வாட்டி ராவுக்கு இரண்டு கால்களும் இருக்கான்னு செக் பண்ணிகூங்க
டைரியில் பெயர் இருப்பவர்களிடம் ராமமோகன் ராவ் அவ்வப்போது தொலைபேசியில் உரையாடி இருப்பதும் தெரியவந்துள்ளது. எனவே ஊழலில் அவர்களும் தொடர்பு இருக்குமோ? என்ற சந்தேகம் வருமான வரித்துறை அதிகாரிகளுக்கு எழுந்து உள்ளது. இதையடுத்து ராம மோகன ராவின் டைரியில் பெயர் இடம் பெற்றுள்ள அமைச்சர்கள், அதிகாரிகளின் நடமாட்டத்தை வருமான வரித்துறை அதிகாரிகள் ரகசியமாக கண்காணித்து வருகின்றனர்.
முழு ஆதாரம் கிடைத்தவுடன் அடுத்தடுத்து அதிரடி சோதனைகள் மேற்கொள்ளப்படும் என்று தகவல் வெளியாகி உள்ளது. கைப்பற்றப்பட்ட ராம மோகன ராவின் ரகசிய டைரி மற்றும் முக்கிய ஆவணங்களை அமலாக்கத்துறை அதிகாரிகளிடம் வருமான வரித்துறை அதிகாரிகள் ஒப்படைத்து உள்ளனர். அந்த ஆவணங்களை அமலாக்கத்துறை அதிகாரிகள் தீவிரமாக ஆராய்ந்து வருகின்றனர்.
இந்த ஆய்வு முடிந்தவுடன், வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்தல், பணம் மோசடி, கூட்டு சதி, முறைகேடாக தங்கம் பதுக்குதல் ஆகியவற்றின் அடிப்படையில் ராம மோகன ராவ், அவருடைய மகன் விவேக், விவேக்கின் நண்பர் வக்கீல் அமலநாதன் உள்ளிட்டோரிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடி விசாரணை மேற்கொள்வார்கள் என தெரிகிறது.
ராம மோகன ராவ், அவரது மகன் விவேக் ஆகியோர் மீது அமலாக்கப்பிரிவு நடவடிக்கை ஒருபுறம் இருக்க, இன்னொரு புறம் சி.பி.ஐ.யின் நடவடிக்கையும் அவர்கள் மீது விரைவில் பாயும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ராம மோகன ராவ் சி.பி.ஐ. போலீசாரால் கைது செய்யப்படலாம் என்றும் கோட்டை வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக