இவ்வாறு தருமபுரி புலிக்கரையில் செயல்படும் இந்தியன் வங்கியில் பெரும் கொள்ளை நடந்துள்ளது.
பணக்காரர்களுக்கே கொடுக்கப்படுகிறது. நாடு முழுவதும் இதே நிலைதான் உள்ளது. வங்கி அதிகாரிகளும், போலீசாரும், அரசியல் கட்சி தலைவர்களுக்கும் கூட்டுசேர்ந்து பணத்தை மாற்ற கமிஷன் பெறுவது, என்பது ஒரு தொழிலாகவே நடைப்பெறுகிறது.
தருமபுரியிலிருந்து பாலக்கோடு செல்லும் வழியில் அமைந்திருப்பதுதான் புலிகரை கிராமம். கரும்பு விவசாயிகள், பூ விவசாயிகள் மற்றும் பல்வேறு விவசாயப் பணிகளில் ஈடுபடுகின்ற மக்களுக்கு பணப் பரிமற்றத்திற்கான ஒரே இடம் என்றால், புலிக்கரை இந்தியன் வங்கிதான்.
இந்த வங்கியில் கணக்கு வைத்திருக்கும் விவசாயி சிவக்குமார். இவர் நகைக் கடனுக்கு வட்டிக் கட்டவில்லை என்பதால் இவரது வங்கிக் கணக்கு முடக்கி வைத்திருந்தார் புலிகரை இந்தியன் வங்கி மேலாளர் பிரபாகரன். இதற்காக பலமுறை சிவக்குமார் வங்கி மேலாளரிடம் கெஞ்ஜியும் வங்கி மேலாளர் மசியவில்லை. இதனால், மனமுடைந்து தனது சேமிப்புப் பணத்தை எடுக்கமுடியாமல் தவித்துவந்தார்.ஒரு கட்டத்தில் இந்தப் பணத்தை எடுக்க முடியாது என்பதால், அதனை மறந்தே போய்விட்டார்.
இதற்குள் அன்று மாலைக்குள் அவரது வங்கிக் கணக்கில் சில மாற்றங்கள் நடப்பதைப் பார்த்தார். அதனை அவரால் அப்போது புரிந்து கொள்ள இயலவில்லை. அதன் பின்னர்தான் ஒருவாராக யூகித்துக் கொண்டார். அதாவது, அடமானத்தில் இருந்த அவரது நகையை யாரோ எடுத்துவிட்டு, மறு அடமானத்தில் வைப்பதாக அதன் போக்கு அமைந்திருப்பதை உணர்ந்து கொண்டார்.
இந்த மோசடியை அம்பலபடுத்தி மக்கள் அதிகாரம் சார்பாக, இந்தியன் வங்கி மேலாளரைக் கைது செய்யக் கோரியும் கருப்புப் பண ஒழிப்பின் முகவிலாசத்தை அம்பலப்படுத்தியும் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டன. சுவரொட்டி ஒட்டிய பிறகு இரவோடு இரவாக வங்கி மேலாளரே ஆட்களை அழைத்து சென்று சுவரொட்டிகளை கிழித்துள்ளார். இதனை அறிந்த மக்கள் அதிகாரம் மீண்டும் அதிகாலையே சுவரொட்டி ஒட்டியது. இதனை எதிர்பார்க்காத மேனேஜர் மக்கள் அதிகாரம் தொடர்பு எண்ணுக்கு போன் செய்து தான் எந்த தவறு செய்யவில்லை உங்கள் பிரபலத்திற்காக போஸ்டர் போடரிங்க என்றார். எங்களிடம் ஆதாரம் உள்ளது என பதிலளிக்கவே கொஞ்சம் பம்மினார். அடுத்து போலீசார் போன் செய்து ஆதாரம் கொடுங்கள் உங்கள் மீது கேஸ் கொடுத்துள்ளார் வங்கி மேலாளர் என கொஞ்சம் மிரட்டும் தோனியிலும், மறுபக்கத்தில் பஞ்சாயத்து பேசிக்கொள்வதற்கும் முயற்சி மேற்கொண்டனர். இவை எதற்கும் மசியதா போது ஒரு நபரை அனுப்பி மக்கள் அதிகாரம் தோழர்களிடத்தில் சமாதானம் பேச வைத்தார் வங்கி மேலாளர் பிரபாகரன்.
அப்படி பேச வந்த நபரிடம் என்ன பேச வேண்டும் என தோழர்கள் கேட்க, அதற்கு வந்தவர் சொன்னார் பணம் மாறியது எல்லாம் உண்மைதான் நீங்க என்ன டிமாண்டு வைக்கிறீங்க என்றார். இப்படி சாதாரண ஏழை மக்களின் வங்கி கணக்கை பயன்படுத்தி மோசடி செய்வது, பணக்காரர்களின் பணத்தை மாற்றி கொடுப்பது தவறுயில்லயா என்று கேட்க, அதற்கு பணமெல்லாம் அமைச்சரின் பினாமி மூலம் வந்தது என்றார். நீங்க சொல்லுங்க என்றார். பேரம் பேசுவதற்கு தான் வந்தது இதன் மூலம் நமக்கு புரிந்து விட்டது. கொஞ்ச நேரம் பேசி பார்த்தார், இவர்கள் செட்டாக மாட்டார்கள் என சென்றுவிட்டார். ஒரு கிராமத்தில் இருக்கும் வங்கி கணக்கில் மட்டுமே பல லட்சம் கொள்ளையடிக்கும் போது, பணமில்லாத பரிவர்த்தனை என்பது யாருக்கு சேவை செய்யும் என்பதை நாம் புரிந்துக்கொள்ள வேண்டும்.
ஏற்கனவே, ஏ.டி.எம் கடவு எண்களைத் திருடுவது, செல்ஃபோன் பாஸ்வேர்டுகள் திருடுவது எல்லாம் சர்வசாதாரணமாகிவிட்ட நிலையில், இந்தக் கொள்ளையை நாம் ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும். இது எவ்வளவு பெரிய ஆபத்து என மக்கள் உணர வேண்டும்..
இது மட்டுமல்ல, பல பன்னாட்டு மென்பொருள் நிறுவனங்கள் (சாப்ட்வேர் கம்பெனிகள்) இந்தியாவில் வங்கிப் பரிமாற்றம் எந்த வகையிலும் பாதுகாப்பானதில்லை என்று அண்மையில் அறிவித்துள்ளன. மோடியின் டிஜிட்டல் இந்தியாவினால், ஏழைகளின் வங்கிப் பணம் எல்லாம் கண்டவனெல்லாம் திருடும் நிலைமை ஏற்பட்டுள்ளது. இதனைவிடக் கொடுமை என்னவெனில், இந்த டிஜிட்டல் இந்தியாவில் நாம் ஒப்புதல் கொடுத்தது போலவே ஒரு தோற்றத்தை உருவாக்கி திருட முடியும் என்பதுதான். ஆகையால், கார்ப்பரேட் கொள்ளையர்கள் நமது பணத்தைக் கொள்ளையடிப்பது மட்டுமல்ல, கண்டவனெல்லாம் திருடலாம். இந்தத் திருட்டையும் மக்கள் உடனே புரிந்து கொள்ள முடியாது. வங்கியில் காசு இல்லை என்று பொருள் வாங்க போகும் போதுதான் தெரிந்து கொள்ள முடியும். இந்த மோசடியை முறிடிக்க உடனே வீதிக்கு வருவதுதான் போராடுவதுதான் நமக்கு முன் இருக்கும் ஒரே வழி.
தகவல் :
மக்கள் அதிகாரம்
தருமபுரி : 81485 73417. வினவு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக