ஞாயிறு, 18 டிசம்பர், 2016

தினமணி :'காங்கிரசுக்கு சுயநலமே முக்கியம்'

ஆதார் முதல் அன்னிய முதலீடு அனைத்தையும் எதிர்த்து பாராளுமன்றத்தை முடக்கியவர்கள் பிஜேபியினர். இப்போது எல்லா திட்டங்களுக்கும் ஆதார் தான் அடிப்படை. காங்கிரஸ் தொலைநோக்கு திட்டத்தை அப்போது எதிர்த்தவர்கள் பிஜேபி யினர். "Direct to Bank Account" திட்டத்தை ராகுல் முன்னிலைப்படுத்திய போது அதை கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிரானது என்று எதிர்த்தவர்கள் பிஜேபியினர்.
புதுடில்லி:''அரசின் ஊழலுக்கு, மோசடிக்கு எதி ராக எதிர்க்கட்சிகள், இதற்கு முன், போராட்டம் நடத்தின; தற்போது, ஊழல், கறுப்புப் பணத்தை ஒழிக்க, அரசு எடுத்துள்ள நடவடிக்கையை, காங்., எதிர்ப்பது விந்தையாக உள்ளது,'' என, பிரதமர் நரேந்திர மோடி கூறினார். பா.ஜ., - எம்.பி.,க்கள் கூட்டம், டில்லியில், நேற்று நடந்தது. இதில் பங்கேற்ற, பிரதமர் மோடி பேசியதாவது:பார்லி., செயல்பட விடா மல், எதிர்க்கட்சிகள் முடக்கியுள்ளது வேதனை அளிக்கிறது. அரசின் மோசடி, ஊழல் நடவடிக் கைகளுக்கு எதிராக, எதிர்க்கட்சிகள் பார்லிமென் டிலும், வெளியிலும் போராட்டங்கள் நடத்துவது வழக்கம்.


தற்போது, கறுப்புப் பணம், ஊழலை ஒழிப்பதற் காக,மத்திய அரசு மேற்கொண்டு வரும் முயற்சி களுக்கு, எதிர்க்கட்சியான, காங்., எதிர்ப்பு தெரி வித்து, பார்லி.,யை முடக்குவது விந்தையாக உள்ளது.பா.ஜ.,வுக்கு, தேச நலனே முக்கியம். அந்த கொள்கை அடிப்படையில் தான், இந்த அரசு செயல்படுகிறது. ஆனால், காங்கிரசுக்கு,தேச நலனை விட, சுயநலன், கட்சித் தலைவர்களின் சொந்த நலன் மட்டுமே முக்கியம்.

காங்கிரசின் நோக்கத்தை புரிந்து கொண்டு, 'டிஜிட் டல்' பரிவர்த்தனையை ஊக்குவிக்கும் அரசின் முயற்சி, மக்களிடம் சென்றடைய வேண்டும். கறுப்புப் பணம், ஊழல், லஞ்சத்துக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, காங்கி ரசைச் சேர்ந்த, முன்னாள் பிரதமர், மன்மோகன் சிங் கூறியுள்ளார்.

அவர் பிரதமராக இருந்த, 10 ஆண்டுகளில், கறுப் புப் பணத்துக்கு எதிராக, ஒரு சிறு துரும்பை கூட எடுத்துப் போடவில்லை.காங்., ஆட்சியில், 'நிலக் கரி சுரங்க மோசடி, போபர்ஸ் ஊழல், 2ஜி' என, பல்வேறு ஊழல்கள் நடந்த போது, அவற்றுக்கு எதிராக, கம்யூ., கட்சிகள் கடுமை யாக போராடின. ஆனால், தற்போது, மத்திய அரசு மேற்கொள்ளும் நல்ல முயற்சிகளுக்கு எதிராக, காங்கிரசுடன், கம்யூ.,கட்சிகளும் எதிர்ப்பு தெரிவிக்கின்றன.

இந்திரா பிரதமராக இருந்த போது, செல்லாத< ரூபாய் நோட்டு அறிவிப்பை வெளியிடுவது குறித்து, வாங்க்சூ குழு பரிந்துரை அளித்திருந் தது. அதை உடனே செயல்படுத்தும்படி, கம்யூ., தலைவர்கள், இந்திராவிடம் வலியுறுத்தினர். தேச நலனை மட்டுமே கருத்தில் கொண்டு செயல்பட்ட, கம்யூ., கட்சிகள், தற்போது தடம் மாறியுள்ளன.

ஊழலின் ஊற்றுக்கண்ணான, காங்., 1988ல், பினாமி சட்டம் கொண்டு வந்தது; ஆனால், செயல்படுத்தவில்லை. அதற்கான சட்ட விதி களை உருவாக்கவில்லை.

இந்த சட்டம், நடை முறைக்கு வந்துவிடக் கூடாது என்பதில், காங்., உறுதியாக இருந்தது. இவ்வாறு அவர் பேசினார்

கருத்துகள் இல்லை: