புதன், 10 பிப்ரவரி, 2016

குடிபோதையில் மகனை தூக்கிட்டு கொன்றுவிட்டு தானும் தூக்கிட்டு தற்கொலை..மூடு டாஸ்மாக்கை மூடு


வேடசந்துார் அருகே குடும்பத் தகராறில், போதை தலைக்கேறிய தந்தை மகனை துாக்கிட்டுக் கொன்று, தானும் தற்கொலை செய்து கொண்டார்.வேடசந்துார் ஒன்றியம் மல்வார்பட்டி ஊராட்சி ஒத்தக்கடையை சேர்ந்தவர் கணேசன்,42. கோவை தனியார் நுாற்பு ஆலையில் தங்கியிருந்து வேலை பார்த்தார். இவரது மனைவி ஈஸ்வரி,35. இவர்களுக்கு ஹரிஹரசுதன்,8, சக்திவேல்,5, என்ற இரு மகன்கள் உள்ளனர். இருவரும் வேடசந்துாரில் தனியார் பள்ளியில் படித்து வருகின்றனர். கடந்த ஞாயிறு அன்று கணேசன் கோவையில் இருந்து ஊருக்கு வந்தார். மகன்களுக்கு பள்ளியில் கட்டணம் செலுத்த வேண்டும் என்பதால், பணம் தொடர்பாக தம்பதியரிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, ஈஸ்வரி தனது தந்தை ஊரான பொன்மாந்துரை குளிப்பட்டிக்கு, ரூ.22 ஆயிரம் பணம் கேட்கச் சென்று விட்டார்.
அன்று இரவு கணவன் மனைவி இருவரும் அலைபேசியில் பேசியபடி தகராறில் ஈடுபட்டனர். போதையில் இருந்த கணேசன், மனைவி மீதான ஆத்திரத்தில் வீட்டில் படுத்து துாங்கிய மகன் ஹரிஹரசுதனின் கழுத்தில் கயிறை மாட்டி, விட்டத்தில் தொங்கவிட்டார்.

இதில் ஒருபாவமும் அறியாத அந்த சிறுவன் துடிதுடித்து இறந்தான்.காலையில் போதை தெளிந்த கணேசன், தனது மகனை தானே கொன்றதை உணர்ந்தார். அருகில் உள்ள தனியார் தோட்டத்திற்கு சென்று விஷம் குடித்து அவரும் தற்கொலை செய்து கொண்டார். போலீசார் விசாரித்து வருகின்றனர்.மதுபோதையால் இரு உயிர்கள் பறிபோனது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.  தினமலர்.com

மகனை துாக்கிட்டுக் கொன்று, தானும் தற்கொலை செய்து கொண்டார்.வேடசந்துார் ஒன்றியம் மல்வார்பட்டி ஊராட்சி ஒத்தக்கடையை சேர்ந்தவர் கணேசன்,42. கோவை தனியார் நுாற்பு ஆலையில் தங்கியிருந்து வேலை பார்த்தார். இவரது மனைவி ஈஸ்வரி,35. இவர்களுக்கு ஹரிஹரசுதன்,8, சக்திவேல்,5, என்ற இரு மகன்கள் உள்ளனர். இருவரும் வேடசந்துாரில் தனியார் பள்ளியில் படித்து வருகின்றனர்.

கருத்துகள் இல்லை: