தி.மு.க., சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை தானே தேர்வு செய்ய உள்ளதாக,
கட்சியின் இரண்டாம் கட்ட தலைவர்கள் சிலரிடம், கருணாநிதி கூறியிருப்பது,
ஸ்டாலின் ஆதரவாளர்களை கலக்கம் அடையச் செய்துள்ளது.
இதுதொடர்பாக, தி.மு.க., வட்டாரங்கள் கூறியதாவது:தமிழகம்
முழுவதும், 'நமக்கு நாமே' பயணத்தை நடத்தி வரும் ஸ்டாலின், ஆரம்பத்தில்,
'தி.மு.க.,வின் முதல்வர் வேட்பாளர் கருணாநிதியே' என, கூறி வந்தார். ஆனால்,
இப்போது, 'கட்சியின் முதல்வர் வேட்பாளர் யார் என்பதை, தலைவர் கருணாநிதி
முடிவு செய்வார்' என, கூற ஆரம்பித்துள்ளார். இதனால், கருணாநிதி கோபம்
அடைந்துள்ளார். அதற்கேற்றார்போல,
கட்சியின் மூத்த தலைவர்கள் சிலர் அவரைச் சந்தித்துப் பேசியபோது,
ஸ்டாலினின் மாறுபட்ட பேச்சுக்களை பற்றி எடுத்துக்கூறி,அவரின் கோபத்தை
மேலும் துாண்டியுள்ளனர். எனவே, சட்டசபை தேர்தலில், தி.மு.க., சார்பில்
போட்டியிட உள்ள வேட்பாளர்களைத்தானே தேர்வு செய்யப் போவதாக அறிவித்துள்ளார். பயபுள்ள கார் வேணுமுன்னு கேட்கலாம் வீடு வேணுமுன்னு கேட்கலாம் இந்த பய புள்ள கட்சி வேணும் நாடு வேணும்னுல கேக்குது...வெளங்குமா?
'கடந்த லோக்சபா தேர்தலின் போது, தி.மு.க., சார்பில் தேர்வு செய்யப்பட்ட வேட்பாளர்கள் பலர் சரியில்லாதவர்களாக இருந்தனர். அதுவும், கட்சியின் தோல்விக்கு காரணமாகி விட்டது' என்றும், அதற்கு கருணாநிதி காரணம் கூறியுள்ளார்.இதனால், ஸ்டாலின் மற்றும் அவரின் ஆதரவாளர்களைப் பிடித்து, தேர்தலில் போட்டியிட, எப்படியும், 'சீட்' வாங்கி விடலாம் என்ற கனவில் உள்ள பலர், அதிர்ச்சி அடைந்துள்ளனர். இவ்வாறு தி.மு.க., வட்டாரங்கள் தெரிவித்தன.
தேர்தலின்போது, ஸ்டாலின் குடும்ப தலையீட்டால், தகுதியில்லாத பல வேட்பாளர்கள் நுழைக்கப்பட்டு விட்டனர்.கட்சிக்கே சம்பந்தமில்லாத தொழில் அதிபர்கள் பலர்
வேட்பாளரானதால், கட்சி படுதோல்வி அடைந்தது. அந்த நிலையைப் போக்கவே, இம்முறை வேட்பாளர் தேர்வை கருணாநிதி கையில் எடுக்க உள்ளார். இவ்வாறு அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
- நமது நிருபர் - தினமலர்.com
'கடந்த லோக்சபா தேர்தலின் போது, தி.மு.க., சார்பில் தேர்வு செய்யப்பட்ட வேட்பாளர்கள் பலர் சரியில்லாதவர்களாக இருந்தனர். அதுவும், கட்சியின் தோல்விக்கு காரணமாகி விட்டது' என்றும், அதற்கு கருணாநிதி காரணம் கூறியுள்ளார்.இதனால், ஸ்டாலின் மற்றும் அவரின் ஆதரவாளர்களைப் பிடித்து, தேர்தலில் போட்டியிட, எப்படியும், 'சீட்' வாங்கி விடலாம் என்ற கனவில் உள்ள பலர், அதிர்ச்சி அடைந்துள்ளனர். இவ்வாறு தி.மு.க., வட்டாரங்கள் தெரிவித்தன.
தொழில் அதிபர்களுக்கு வாய்ப்பில்லை!
தி.மு.க., வட்டாரங்கள் மேலும் கூறியதாவது: கடந்த, 2014 லோக்சபாதேர்தலின்போது, ஸ்டாலின் குடும்ப தலையீட்டால், தகுதியில்லாத பல வேட்பாளர்கள் நுழைக்கப்பட்டு விட்டனர்.கட்சிக்கே சம்பந்தமில்லாத தொழில் அதிபர்கள் பலர்
வேட்பாளரானதால், கட்சி படுதோல்வி அடைந்தது. அந்த நிலையைப் போக்கவே, இம்முறை வேட்பாளர் தேர்வை கருணாநிதி கையில் எடுக்க உள்ளார். இவ்வாறு அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
- நமது நிருபர் - தினமலர்.com
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக