பீகார் மாநில பா.ஜ.க. துணைத்தலைவர் இன்று மர்ம நபர்களால் சுட்டுக்
கொல்லப்பட்டார். பீகார் மாநில பா.ஜ.க. துணைத்தலைவராக இருந்தவர் விசேஷ்வர் ஓஜா (வயது 45). கடந்த ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில் ஷாப்பூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை இழந்தவர். இவர் மீது கொலைக் குற்றச்சாட்டு உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட குற்ற வழக்குகள் உள்ளன. இந்நிலையில், விசேஷ்வர் ஓஜா போஜ்பூர் மாவட்டம், பர்சவுரா கிராமத்தில் நடந்த திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டு விட்டு, காரில் வீட்டுக்கு திரும்பிக்கொண்டு இருந்தார். அப்போது கார் மற்றும் இருசக்கர வாகனத்தில் வந்த 12-க்கும் மேற்பட்ட மர்மநபர்கள் விசேஷ்வர் ஒஜா காரை வழிமறித்து, துப்பாக்கியால் சரமாரியாக சுட்டுத் தள்ளிவிட்டு தப்பி ஓடிவிட்டனர்.
இதில் விசேஷ்வர் ஓஜா மற்றும் கார் டிரைவர் உள்ளிட்ட 3 பேர் மீது குண்டு பாய்ந்தது. இதில் ஓஜா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மற்ற இருவரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
முன்விரோதம் காரணமாக இந்த கொலை நடந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக