ஞாயிறு, 7 பிப்ரவரி, 2016

டெல்லியில் பல்கலைக் கழக மாணவி கொடூர கொலை: நண்பர் வீட்டு படுக்கையறையில் சடலம் கண்டெடுப்பு


டெல்லி பல்கலை கழகத்தில் படிக்கும் மூன்றாம் ஆண்டு மாணவி அர்ஜூ சிங்
(23) அவரது நண்பரால் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டு வீட்டு படுக்கையறையில் சடலமாக கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 2ம் தேதி பல்கலைக் கழகத்திற்கு சென்ற அர்ஜூ சிங் மாயமானார். இது தொடர்பாக மாடல் டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அர்ஜூ சிங் வகுப்புகள் முடிந்ததும் கடைசியாக அவரது நண்பர் நவீன் காத்ரி உடன் சென்றதை பார்த்தாக மற்ற நண்பர்கள் கூறினர். முன்னதாக, அர்ஜூ சிங் மற்றும் காத்ரி இருவரும் திருமணம் செய்ய விரும்பியதாகவும், ஆனால் அதற்கு அவர்களது குடும்பத்தினர் 4 மாதங்களுக்கு முன்பு மறுப்பு தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது. இருப்பினும் இருவரும் தொடர்ந்து சந்தித்து பேசி வந்துள்ளனர். பின்னர் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது.


காத்ரி பிப்ரவரி 4-ம் தேதி வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்ய இருந்த நிலையில், அர்ஜூ சிங்கை கொலை செய்து பின்னர் வீட்டின் படுக்கையறையில் மறைத்து வைத்துள்ளார். அர்ஜூ சிங் மாயமானது தொடர்பாக காத்ரியிடம் நடத்தப்பட்ட விசாரணையில் இந்த உண்மை தெரியவந்தது.

”என்னுடைய சகோதரி திருமணத்தின் போது பிரச்சனை செய்வார் என்று நினைத்து காத்ரி இந்த கொலையை செய்துள்ளார்” என்று அர்ஜூ சிங்கின் சகோதரி பயல் தெரிவித்துள்ளார். maalaimalar.com

கருத்துகள் இல்லை: