ஈரோடு: தம்மை நடிகை என விமர்சனம் செய்யும் அதிமுக அமைச்சர்கள்,
முதல்வர் ஜெயலலிதா அன்னை தெரசா அல்லது அன்னிபெசண்ட் அம்மையார்
குடும்பத்தைச்
சேர்ந்தவரா? என விளக்கம் தர வேண்டும் என்று காங்கிரஸ் கட்சியின் தேசிய
செய்தித் தொடர்பாளரான நடிகை குஷ்பு வலியுறுத்தியுள்ளார்.
ஈரோட்டில் செய்தியாளர்களிடம் நேற்று பேசிய குஷ்பு கூறியதாவது:
நான் நடிகைதான். காங்கிரஸ் கட்சியில் நான் இருக்கிறேன். காங்கிரஸ் கட்சி
என் பின்னால் இல்லை. காங்கிரஸ் கட்சியில் ஒவ்வொருவரும் என்னை நடிகையாக
பார்க்கவில்லை.
காங்கிரஸ் தொண்டராகவே பார்க்கிறார்கள். ஜெயலலிதா யார்? அன்னை தெரசாவின் குடும்பத்தை சேர்ந்தவரா? இல்லை அன்னிபெசன்ட் அம்மையாரின் உறவினரா? அவரது பின்னால்தான் அ.தி.மு.க.வினர் இருக்கிறார்கள். தி.மு.க.வுடன் காங்கிரஸ் கூட்டணி அமைந்தால் தி.மு.க. மேடைகளில் பேசுவதில் எனக்கு எந்த தயக்கமும் இல்லை. தி.மு.க. தலைவர் கருணாநிதி மீதான மரியாதை சிறிதளவும் குறையாமல் வைத்திருக்கிறேன். கட்சி அளவில் நான் தி.மு.க.வை விட்டு காங்கிரசில் சேர்ந்திருக்கிறேன். அதற்காக மரியாதை இல்லை என்பது இல்லை. சட்டசபை தேர்தலில் போட்டியிடுவது குறித்து நான் எந்த முடிவும் எடுக்கவில்லை. கட்சி மேலிடம் உத்தரவிட்டால் போட்டியிடுவேன். இவ்வாறு நடிகை குஷ்பு கூறினார்.tamil.oneindia.com

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக