சனி, 13 பிப்ரவரி, 2016

அடுக்குமாடி கட்டடங்களில் 'சோலார்' மின் உற்பத்தி கட்டாயம் அரசாணை பிறப்பித்தது தமிழக அரசு

தமிழகத்தில், மூன்று மாடிக்கும் மேற்பட்ட அனைத்து அடுக்குமாடி கட்டடங்கள், சிறப்பு கட்டடங்கள், தொகுப்பு குடியிருப்பு கட்டடங்களில், சூரிய சக்தி மின் உற்பத்திக்கான கட்டமைப்புகளை ஏற்படுத்துவது கட்டாயமாக்கப்பட்டு உள்ளது. இதற்காக, விதிகளில் திருத்தம் செய்யும் அரசாணையை, தமிழக அரசு பிறப்பித்து உள்ளது. 'சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தாத, மின் உற்பத்தியை ஊக்குவிக்க, அனைத்து அடுக்குமாடி கட்டடங்கள் மற்றும் தொகுப்பு வீடுகள் திட்டங்களில், சூரிய சக்தி மின் உற்பத்தி கட்டமைப்புகளை ஏற்படுத்த வேண்டியது கட்டாயமாக்கப்படும்; இதற்காக, வளர்ச்சி விதிகளில் திருத்தம் செய்யப்படும்' என, சட்டசபையில், 110வது விதியின் கீழ், முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார். இதையடுத்து, 1971 நகரமைப்பு சட்டத்தில், தேவையான திருத்தங்களை செய்வது குறித்து, சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமமான, சி.எம்.டி.ஏ., நகரமைப்புத் துறை, எரிசக்தி துறை, நகராட்சி நிர்வாகத் துறை உயர் அதிகாரிகள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் நடந்தது.   . டூ லேட், இதை ஏற்கனவே  செயல் படுத்தி இருக்க வேண்டும்.. நெட் மீட்டர் பொருத்தி வீடுகளிலிருந்து பகல் நேரத்தில் உற்பத்தியாகும் கரண்டை அரசே விலைக்கு வாங்குவதற்கு ஏதாவது வழி உண்டா என்று முயற்சி செய்யலாம். அதைவிட்டு.... காப்பறேட்டுக்களிடம்  அதிக விலைக்கு வாங்கி கமிசன் அடித்து ......


இந்நிலையில், தலைமைச் செயலர் தலைமையில், இது தொடர்பாக ஆய்வு செய்யப்பட்டு, அரசாணைக்கான வரைவு கோப்பு, அண்மையில் நடந்த அமைச்சரவை கூட்டத்திற்கு அனுப்பப்பட்டது. அமைச்சரவை ஒப்புதல் கிடைத்ததை அடுத்து, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை செயலர் தர்மேந்திர பிரதாப் யாதவ், அரசாணை பிறப்பித்து உள்ளார்.

அரசாணை:
சோலார் மின் உற்பத்தி குறித்த அரசாணையில்
கூறப்பட்டு இருப்பதாவது: சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமமான, சி.எம்.டிஏ., நகர் மற்றும் ஊரமைப்புத் துறையான, டி.டி.சி.பி., அளித்த பரிந்துரைகள் அடிப்படையில், அனைத்து சிறப்பு கட்டடங்கள், அடுக்குமாடி கட்டடங்கள், தொகுப்பு குடியிருப்பு கட்டடங்களில், சூரிய சக்தியை பயன்படுத்தி மின்உற்பத்தி செய்வதற்கான கட்டமைப்புகளை ஏற்படுத்துவது கட்டாயமாக்கப்படுகிறது.

விதிமுறைகள்:
* இதன்படி, மொட்டை மாடியில் மொத்த பரப்பளவில் மூன்றில், ஒரு பங்கு இடத்தை, 'சோலார் பேனல்'கள் வைக்க ஒதுக்க வேண்டும்
* உத்தேசமாக, 'போட்டோ வோல்டக் பேனல்'களை பயன்படுத்தி, 1 கிலோ வாட் மின் உற்பத்தி செய்ய, 10 சதுர மீட்டர் இடம் தேவை
* ஒன்றுக்கும் மேற்பட்ட உரிமையாளர்கள் உள்ள கட்டடங்களில் இந்த கட்டமைப்புகளை பயன்படுத்தி, உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தை, படிக்கட்டுகள் பக்கவாட்டு காலி இடங்கள், நடைபாதைகள், 'லிப்ட், மோட்டார்'கள் இயக்குவது போன்ற பொது தேவைகளுக்கு பயன்படுத்தலாம்
* ஒரே உரிமையாளர் இருக்கும் கட்டடங்களில், இவ்வகையில் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தை, அனைத்து தேவைகளுக்கும் பயன்படுத்தலாம்
* தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் வழிகாட்டி விதிகள் அடிப்படையில், இத்தகைய கட்டடங்களில், 'நெட் மீட்டரிங்' முறையை பின்பற்ற வேண்டும்.

புதிய கட்டடங்களுக்கு...:
கட்டடங்களில் இந்த வசதி, உரிய முறையில் <>ஏற்படுத்தப்பட்டு உள்ளது என்பதை உறுதி செய்து, சி.எம்.டி.ஏ., உள்ளூர் திட்ட குழும அதிகாரிகள், பணி நிறைவு சான்று அளிக்க
வேண்டும்
* இந்த சான்று அடிப்படையில், நெட் மீட்டரிங் அடிப்படையில் மின் இணைப்பு வழங்க, மின்சார உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்
* சி.எம்.டி.ஏ.,வின் முழுமை திட்ட அடிப்படையில் தயாரிக்கப்பட்ட வளர்ச்சி விதிகளின், 25வது பிரிவிலும்; உள்ளூர் திட்ட குழும விதிகளில் உரிய திருத்தம் செய்ய வசதியாக, 1971ம் ஆண்டு நகர் மற்றும் ஊரமைப்பு சட்டத்தின் பிரிவு, 32, உட்பிரிவு நான்கிலும் திருத்தம் செய்ய உத்தரவிடப்படுகிறது
* இந்த ஆணையை அமல்படுத்த தேவையான நிர்வாக நடவடிக்கைகளை எடுக்க, சி.எம்.டி.ஏ., உறுப்பினர் செயலர், டி.டி.சி.பி., ஆணையருக்கு உத்தரவிடப்படுகிறது.
இவ்வாறு அரசாணையில் குறிப்பிடப்பட்டு உள்ளது. பழைய கட்டடங்களுக்கு...: சூரிய சக்தி மின் உற்பத்திக்கான அரசாணையின்படி, பிப்., 5ல் இருந்து மட்டுமே, இந்த நடைமுறை அமலுக்கு வருகிறது. இந்த தேதிக்கு பின், திட்ட அனுமதி வழங்கப்படும் அனைத்து கட்டடங்களுக்கும், இது கட்டாயமாகிறது. எனவே, தற்போது பரிசீலனையில் உள்ள விண்ணப்பங்கள், பரிசீலனை முடிந்து இறுதி முடிவு எடுக்கப்பட வேண்டிய நிலையில் உள்ள திட்டங்களின் அனைத்து கட்டடங்களுக்கும், இந்த உத்தரவு பொருந்தும். ஏற்கனவே கட்டப்பட்டு, பயன்பாட்டில் உள்ள பழைய கட்டடங்களுக்கு இது பொருந்தாது.
பழைய கட்டடங்களுக்கு...:
சூரிய சக்தி மின் உற்பத்திக்கான அரசாணையின்படி, பிப்., 5ல் இருந்து மட்டுமே, இந்த நடைமுறை அமலுக்கு வருகிறது. இந்த தேதிக்கு பின், திட்ட அனுமதி வழங்கப்படும் அனைத்து கட்டடங்களுக்கும், இது கட்டாயமாகிறது. எனவே, தற்போது பரிசீலனையில் உள்ள விண்ணப்பங்கள், பரிசீலனை முடிந்து இறுதி முடிவு எடுக்கப்பட வேண்டிய நிலையில் உள்ள திட்டங்களின் அனைத்து கட்டடங்களுக்கும், இந்த உத்தரவு பொருந்தும். ஏற்கனவே கட்டப்பட்டு, பயன்பாட்டில் உள்ள பழைய கட்டடங்களுக்கு இது பொருந்தாது.
- நமது நிருபர் --  dinamalar.com

கருத்துகள் இல்லை: