புதுடில்லி,: சியாச்சின் பனிச் சரிவில் சிக்கி, ஆறு நாட்களுக்கு
பிறகு, நேற்று முன்தினம் உயிருடன் மீட்கப்பட்ட, ராணுவ வீரர், கர்நாடகாவைச்
சேர்ந்த, ஹனுமந்தப்பா உடல் நிலை, நேற்று மோசமடைந்ததை அடுத்து அவர்
இறந்தார்.
ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில், இந்தியா - பாகிஸ்தான்
எல்லைக் கட்டுப்பாட்டு கோடு பகுதியில், கடல் மட்டத்திலிருந்து, 20 ஆயிரம்
அடி உயரத்தில் அமைந்துள்ள, உலகின் மிக உயரமான போர்க்களம் சியாச்சினில்,
பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த வீரர்கள், கடந்த 3ம் தேதி,
பனிச்சரிவில் சிக்கிக் கொண்டனர். அவர்களில், தமிழகத்தை சேர்ந்த, நான்கு
பேர் உட்பட, பத்து பேர் சரிந்து விழுந்த பனிப்பாறைகளுக்குள் சிக்கிக்
கொண்டனர். வீரர் ஹனுமந்தாவை இழந்து வாடும் குடும்பத்துக்கு எமது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறோம்.
ஒன்பது பேர் உடல்கள் மீட்கப்பட்ட நிலையில், நேற்று முன்தினம், வீரர் ஹனுமந்தப்பா உயிருடன் மீட்கப்பட்டார்.டில்லி ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு, தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. எனினும், அவரின் உடல் நிலை நேற்று மோசமடைந்ததாக, மருத்துவமனையின் செய்திக்குறிப்பு தெரிவித்தது.
நேற்று மாலை வெளியான அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:பனி, குளிரினால் ஏற்படக் கூடிய பாதிப்புகள் இல்லாத போதும், ஆறு நாட்கள், தண்ணீர் கூட இல்லாமல் இருந்ததால், ஹனுமந்தப்பாவின் உடல் சக்தியை இழந்து விட்டது. இதனால் அவருடைய நுரையீரல் மற்றும் சிறுநீரகத்தின் செயல்பாடு பாதிக்கப்பட்டுள்ளது; ரத்த ஓட்டமும் சரியாக இல்லை.மூளையில் ஆக்சிஜன் குறைந்துள்ளது. நுரையீரலின் இரண்டு பகுதிகளிலும், நிமோனியா காணப்படுகிறது. அவர் உயிருடன் மீள, அனைவரும் பிரார்த்திப்போம். இவ்வாறு டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.
மிகவும் மோசமான நிலையில் உள்ள அவரை காப்பாற்ற அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படுவதாகவும், டாக்டர்கள் கூறியிருந்தனர். ஹனுமந்தப்பா பூரண குணமடைய வேண்டும் என, நாடு முழுவதும் நேற்று ஏராளமானோர் பிரார்த்தனையில் ஈடுபட்டனர். பாலிவுட் நடிகர்கள் அமிதாப் பச்சன், அமீர் கான் ஆகியோரும், மும்பையில், அலுவலகங்களுக்கு உணவு டப்பாக்களை வழங்கும், 'டப்பாவாலா'க்கள், சிறப்பு பிரார்த்தனை கூட்டத்தை நடத்தினர்.
ஆனால், அவ்வளவும் பலனளிக்காமல் இன்று காலை அவர் வீரமரணம் அடைந்தார். நாடு முழுவதும் கடும் சோகம் கவ்விக்கொண்டது. தினமலர்.com

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக