
இறந்தவர்களுடன் பேச முடியுமா?
ஒருவரோடு ஒருவர் மனத்தால் பேசமுடியுமா?
எதிர்காலத்தில் சந்திக்கபோகும் ஒருவருடன் இப்போதே பேசிக்கொண்டு இருக்கிறோமா?
நேரில் பரிச்சயம் இல்லாத ஒருவரோடு நாம் மனத்தால் பேசமுடியுமா? அல்லது பேசிக்கொண்டுதான் இருக்கிறோமா?

இந்த கேள்விகள் எல்லாமே சாத்தியம் அற்ற கேள்விகளாக தோன்றக்கூடும்.
உண்மையில் இவை எல்லாமே நிச்சயம் சாத்தியமான விடயங்கள்தான்.
இன்னும் சரியாக சொல்லப்போனால் நாம் எம்மை அறியாமலேயே அடிக்கடி செய்துகொண்டிருக்கும் விடயங்கள்தான் இவை.
இவற்றை ஆராய்வதற்கு முன்பாக நாம் பலவிதமான அடிப்படை மாற்றங்களை எமக்குள்ளேயே உருவாக்க வேண்டியிருக்கிறது.
முதலில் நாம் மிகவும் திறந்த மனதோடு அணுகவேண்டும்.
ஏற்கனவே நாம் நம்பிவிட்ட கோட்பாடுகள் எமது அறிவை சிறைபடுத்தி வைத்திருக்கின்றன.

உதாரணமாக கனவுகளை பற்றிய இன்றைய விஞ்ஞான உண்மைகள் மிகவும் பாமரத்தனமான கோட்பாடுகளாக இருக்கிறது.
சகல கனவுகளும் எமது மனதில் உணரப்பட்ட செய்திகளின் பல்வேறு தோற்றங்கள் என்றுதான் விஞ்ஞானம் வரையறுத்து வைத்திருக்கிறது.
சில ஆய்வுகள் இன்றைய விஞ்ஞான கோட்பாடுகளையும் மீறி கனவுகள் பற்றிய சில கருத்துக்களை கவனத்தில் எடுத்துக்கிறது.எனினும் இன்றுவரை விஞ்ஞானம் கனவுகளை வரும்பொருள் உரைக்கும் ஒரு அதிசய சக்தியாக அங்கீகரிக்கவில்லை.

கனவுகளை மிகவும் ஒரு சரியான தரவுகளாக உணர்வதற்கு எமது கனவுகளின் தரம் உயர்த்தப்படவேண்டும்.
கனவு காணும் கலை வளர்க்கப்படவேண்டும். அது ஒரு சக்திவாய்ந்த கருவியாகும்.
எப்படி ராடார் கருவி விஞ்ஞான உலகிற்கு பயன்படுகிறதோ அதைவிட பல மடங்கு சக்திவாய்ந்த பயன்பாடு கனவு கலைக்கு உண்டு.
சரியான கனவை எப்படி காண்பது என்பதை பற்றிய ஆய்வுகள் மேற்கொள்ள படவேண்டும்.

உணர்ந்துள்ளேன். நான் மட்டும் அல்ல, எல்லோருமே இந்த அனுபவத்தை ஓரளவு பெற்றுள்ளார்கள்.
பல கனவுகள் எனக்கு பலவிதமான எதிர்கால தகவல்களை தந்துள்ளது.
எனது கனவில் தோன்றிய பல சம்பவங்கள் மிகவும் ஆச்சரியமான அதிசயமான செய்திகளை அறியத்தந்துள்ளது. பின்பு அவை சரியாகவே நடைபெற்றது .
எந்த( Conventional Scientist )விஞ்ஞானியும் நான் கூறுவதை ஏற்றுகொள்ள மாட்டார்.
ஏனெனில் அவர்கள் தாங்கள் படித்து வாங்கிய பட்டத்தின் அத்திவாரத்தில் ஏறி நிற்பவர்கள். அதை ஆட்டம் காட்டி விட்டால் அவர்கள் கற்றது எல்லாம் ஒன்றும் இல்லை என்று ஆகிவிடும் அல்லவா?
நிறுவனப்படுத்தப்பட்ட விஞ்ஞானம் புதிய கருத்துக்கள் எதையும் இலகுவில் ஏற்றுக்கொண்டதாக வரலாறு இல்லை.
அவர்களின் இருப்பை கேள்விக்குறியாக்கும் தத்துவத்தை அல்லது உண்மைகளை அங்கீகரிப்பதற்கு நேர்மையும் துணிவும் வேண்டும்.
நாம் நித்திரையில் இருந்து விழித்து எழுகின்ற ஒரு சில கண்சிமிட்டும் நேரத்திலேயே எமக்கு ஏராளமான கனவுகள் மறந்து போய்விடுகின்றன.
அந்த ஞாபக மறதி கவனிக்க படவேண்டிய ஆராய்ச்சி செய்யப்படவேண்டிய
ஒரு முக்கியமான நிகழ்வாகும்.
அந்த ஞாபக மறதியை வெற்றி கொள்ள பலவிதமான உத்திகள் பாவிக்கபடுகிறது.
எமது மனம் விழித்தெழும் சமயத்தில் கனவுகளும் நிகழ்கால செய்திகளும் அலை மோதும்.
அந்த சமயத்தில் கனவுகள் எல்லாம் விரைவாக மறந்து போய்
கொண்டிருக்கும்.

ஞாபகத்தில் நிறுத்தி வைக்கவேண்டும்.
எமது (Unconscious Mindi) உள்ளுணர்வில் உள்ள எமது ஆளுமையும் எமது ஆளுமை என்று நாம் எண்ணி கொண்டிருக்கும் (Conscious Mind) எமது ஆளுமையும் வேறுவேறானவை. சில நேரம் இரண்டுக்கும் உள்ள வித்தியாசம் மிகவும் அதிகமாக இருக்கும்.
இந்த இரண்டு எப்பொழுது மிகவும் நெருக்கமாக இருக்கிறதோ அப்போதுதான் நாம் எமது வாழ்வின் சரியான அர்த்தத்தை நோக்கி செல்கிறோம் என்று பொருள்.
பெரும்பாலும் இன்றைய உலகின் வாழ்வு முறையானது மிகவும் செயற்கை ஆகிவிட்டது. உள்ளுணர்வுகளுக்கு மதிப்பே இல்லாமல் போய்விட்டது.
அதன் காரணமாக உள்மனதின் செய்திகளை புரிந்து கொள்ளும் ஆற்றலை மனிதர்கள் இழந்து விட்டார்கள்.
உள்ளுணர்வுகள் மிக அதிகமாக வெளிப்படுவது கனவுகளில்தான்.
எமது ஐம்புலன்களின் ஆதிக்கம் உள்ளுணர்வுகளில் கொஞ்சம் குறைவாகவே பாதிப்பை ஏற்படுத்துகின்றன.
ஆனால் எமது சாதாரண அறிவு எமது ஐம்புலங்களில்தான் பெரிதும் தங்கி இருக்கிறது. .
எமது அறிவு தரும் செய்திகள் எல்லாமே ஐம்புலன்களின் வழிவந்தவைதான்.
மிகவும் அபூர்வமாகவே ஐம்புலன்களையும் தாண்டி உள்ளுணர்வுகளின் அடிப்படையில் இருந்து சில செய்திகளை நாம் பெறுகிறோம்.

நமது ஐம்புலங்களையும் தாண்டி உள்ளுணர்வுகளின் செய்திகளையும்
கொஞ்சம் நாம் கவனித்தால் வாழ்வு மிகவும் அற்புதமாக இருக்கும்.
அந்த உள்ளுணர்வுகளின் மணியோசைகள் எமக்கு அடிக்கடி கேட்டு கொண்டுதான் இருக்கிறது. ஆனால் நாம்தான் அவற்றை அலட்சியம் செய்தே பழகிவிட்டோம்.
எந்த சம்பந்தமும் இல்லாத காட்சிகள் எல்லாம் சிலவேளைகள் எமது கனவுகளில் வருகிறது. அவை ஏன் வருகிறது என்று கொஞ்சம் கூட நாம் சிந்திப்பதில்லை.
இந்த கனவுகளின் சிக்கலான உண்மைகளை அறியவிடாமல் எம்மை தடுப்பது விஞ்ஞானத்தின் குறைபாடு மட்டும் அல்ல.
மந்திர தந்திர ஜோதிஷ கனவு சாஸ்திர விற்பன்னர்களும் தங்கள் பங்குக்கு கனவுகளை பற்றி இட்டு கட்டிய பிற்போக்கு கதைகள் கனவின் அத்திவாரத்தையே தகர்த்து விட்டன.
ஒருபுறம் பிற்போக்கு பார்பனீயம் கட்டி விட்ட கதைகள், மறுபுறம் இதை ஒரு பொருட்டாகவே மதிக்காத வியாபர விஞ்ஞானம், இந்த இரண்டும் சேர்ந்து மனிதர்களுக்கு உள்ளே புதைந்து இருக்கும் கனவுகளின் ராஜ்யத்தை அதன் ரகசியத்தை அறியவிடாமலே செய்து விட்டன.
உங்கள் கனவுகளை நீங்கள் மதிக்க வேண்டும்.

அவை உங்கள் உள்ளுனர்வுகளோடு உங்களை எப்போதும் பிணைத்து வைத்திருக்கும்.
எவ்வளவு தூரம் உங்கள் உள்ளுணர்வோடு நீங்கள் இணைந்து இருக்கிறீர்களோ அவ்வளவோதூரம் நீங்கள் நீங்களாகவே இருக்கிறீர்கள் என்று எண்ணி கொள்ளுங்கள்.
நீங்கள் உண்மையில் நீங்களாகவே இருந்தால் உங்கள் பிறவி நோக்கம் சந்தோஷமாக நிறைவேறும்.
அதுதான் உங்களுக்கு உரித்தான் அற்புத வாழ்க்கை .
அதுதான் நீங்கள் பிறந்ததன் நோக்கம்.
நன்றாக சிந்தித்து பாருங்கள் கனவு காட்சிகளில் பலநேரங்களிலும் நீங்கள் கொஞ்சம் வித்தியாசமாக சிந்திப்பீர்கள் வித்தியாசமாக செயல்படுவீர்கள்.
கனவுகளின்போது உங்களின் மனம் ஒரு வித்தியாசமான எண்ண கலவையாக இருக்கும்.
அதை ஞாபகத்தில் கொண்டு வந்து பார்ப்பது கொஞ்சம் கடினமாக தோன்றலாம்.
மீண்டும் மீண்டும் முயற்சி செய்தால் உங்களின் கனவு மன நிலையை கொஞ்சம் மெதுவாக ஞாபகத்தில் கொண்டுவரலாம்.
எவ்வளவு தூரம் உங்களால் அந்த மனநிலயைஅடைய முடியுமோ அந்த அளவு நீங்கள் உங்கள் உள்ளுணர்வு பொக்கிஷத்தை அடைந்து விட்டீர்கள் என்று அர்த்தமாகும்.
இதுநாள் வரையும் உங்களுக்கு தெரியாத உங்களின் ஒரு விசுவரூபத்தை நீங்கள் தரிசிப்பீர்கள்.
அதுதான் நிஜமான நீங்கள்.
இதுவரை நீங்கள் யாரென்று நீங்கள் எண்ணி கொண்டிருந்தவரைவிட நீங்கள் கொஞ்சம் அதிக பலசாலி என்பதை உணர்வீர்கள்.
குழந்தைகள் அதிக நேரம் நித்திரை கொள்ளும். அந்த குழந்தைகள் நித்திரையில் சிரிப்பதுவும் அழுவது வேடிக்கையான சில அங்க அசைவுகளை காட்டுவதும் கூட அவர்களின் நித்திரை உலகின் சஞ்சாரங்கள்தான்.
அங்கு அவர்களுக்கு கடந்த பிறவியின் ஞாபகங்கள் கூட இருப்பதற்கு வாய்ப்பு உண்டு.
வளர வளர அவர்களும் தங்கள் கனவு சஞ்சார வாய்ப்பை இழந்து விடுகிறார்கள்.
தங்கள் உள்ளுணர்வுகள் என்ற தங்க மாளிகையை விட்டு வெளியே வருகிறார்கள்.
உங்களின் உண்மையான அச்சு அசல் அத்திவாரம் அதுதான். அதை கண்டு பிடிக்க உங்கள் கனவுகள் பெரிய உதவி செய்யும்.
கனவுகள் மட்டும் அல்ல உங்கள் எண்ணங்களும் அந்த காரியத்தை செய்யும் .
இரண்டுக்கும் உள்ள வித்தியாசம் ஒன்று இலகுவில் தெரியும் மற்றது இலகுவில் தெரியாது.
இரண்டுக்கும் இடையே பயணிப்பதற்கு ஒரு பாலம் உண்டு . அந்த பாலத்தில் பயணத்தை ஆரம்பியுங்கள் www.radhamanohar.blogspot.com
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக