ஞாயிறு, 7 பிப்ரவரி, 2016

காங்கிரசுக்கு 25 சீட்...சோனியாவிடம் கனிமொழி நேரில்......

 தி.மு.க., கூட்டணியில் காங்கிரசுக்கு, 25 தொகுதிகளை ஒதுக்கீடு செய்ய
முடிவெடுத்திருப்பதாக, தி.மு.க., மகளிர் அணி செயலர் கனிமொழி, காங்கிரஸ் தலைவர் சோனியாவிடம் கூறியுள்ள தகவல் வெளியாகி உள்ளது.இது குறித்து, தி.மு.க., வட்டாரங்கள் கூறியதாவது: தமிழகத்தில் காங்கிரஸ் தனித்து போட்டியிடும் எனவும்; ஒவ்வொரு தொகுதியிலும் காங்கிரஸ் துணைத் தலைவர் போட்டியிடுவது போலவே இருக்கும் எனவும், தமிழக காங்கிரஸ் தலைவர் இளங்கோவன் பேச ஆரம்பித்தார். இதனால், காங்கிரஸ் மீது கோபமடைந்த தி.மு.க.,வினர் சிலர் - பா.ஜ., தரப்பிடமும் கூட்டணிக்காக பேச்சு வார்த்தை துவங்கி உள்ளனர். இந்நிலையில், சமீபத்தில் சோனியாவை, கட்சியின் மகளிர் அணி செயலர் கனிமொழி சந்தித்து பேசியுள்ளார்.
அப்போது, தி.மு.க.,வின் நிலை குறித்து, கனிமொழியிடம் அவர் கேட்டுள்ளார். 'இளங்கோவனின் பேச்சைத்தொடர்ந்தே, தி.மு.க.,வினர் சிலர், பா.ஜ.,விடம் பேச்சுவார்த்தை துவக்கி உள்ளனர். ஆனால், பா.ஜ.,வுடன் கூட்டணி அமைக்க, கட்சியில் பலருக்கும் பெரிய அளவில் இஷ்டம் இல்லை' என, கூறியுள்ளார்.

இதைத் தொடர்ந்து, தமிழகத்தில், தி.மு.க., கூட்டணியில் காங்கிரசுக்கான இடம் குறித்து பேச்சு திரும்பிய போது, பீஹார் பார்முலாவை மேற்கோள்காட்டி, 'காங்கிரசுக்கு 25 இடங்களை விட்டுக் கொடுக்க தி.மு.க., முடிவெடுத்துள்ளது' என. சோனியாவிடம் கூறியுள்ளார்.

உடனே, 'அதென்ன பீஹார் பார்முலா' என, சோனியா கேட்க, 'பீஹாரில்காங்கிரசுக்கு 8 சதவீத ஓட்டு பலம் உள்ளதால், லல்லு - நிதிஷ் குமார் கூட்டணியில், 40 சீட்களை கொடுத்தனர்.
அந்த அடிப்படையில், பதினைந்து சீட்களுக்கும் குறைவாக தான் கொடுக்க முடியும். ஆனாலும், 25 சீட்களை கொடுக்க, தி.மு.க., தயாராக உள்ளது' என, தெரிவித்துள்ளார். இவ்வாறு கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.
ஆதரவை மறக்கவில்லை! சோனியாவிடம் பேசிய போது, 'காங்கிரஸ் கூட்டணியில் இருந்து தி.மு.க., விலகிய பின் நடந்த ராஜ்யசபா எம்.பி., தேர்தலில், காங்கிரஸ் பெரிய மனதுடன், தி.மு.க.,வுக்கு ஆதரவளித்தது. அதனாலேயே, நான் வெற்றி பெற்று ராஜ்யசபா எம்.பி.,யானேன். அந்த விஷயங்களையெல்லாம், தி.மு.க., மறக்கவில்லை.
அதனால்தான், இன்றும் காங்கிரசுடன், கூட்டணி அமைக்க விரும்புகிறோம்' என, கனிமொழி கூறியுள்ளார்.
- நமது நிருபர் -  dinamalar.com 

கருத்துகள் இல்லை: