சட்டமன்றத்
தேர்தலில் நாம் தமிழர் கட்சியின் சார்பாக போட்டியிடும் 234 வேட்பாளர்களை
அறிமுகம் செய்யும் பொதுக்கூட்டம், கடலூரில் சனிக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்தில் 234 வேட்பாளர்களை அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்
அறிமுகம் செய்து வைத்தார்
திமுக, அதிமுகவுக்கு மாற்றாக நாம் தமிழர் கட்சி இருக்கும் என்று அக்
கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கடலூரி்ல் நடந்த வேட்பாளர் அறிமுக
கூட்டத்தில் கூறியுள்ளார்.
நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் அறிமுக கூட்டம் கடலூர் மஞ்ச குப்பம்
மைதானத்தில் இன்று மாலை நடைபெற்றது. இதில் சட்டமன்றத் தேர்தலில் அக்
கட்சியின் சார்பாக போட்டியிடும் 234 வேட்பாளர்களையும் ஒரே மேடையில் சீமான்
அறிமுகம் செய்து வைத்தார்.
அப்போது அவர் பேசுகையில், தமிழர்கள் பிரிந்து நிற்பதால் நன்மை இல்லை.
தமிழர்கள் ஜாதி ரீதியாக பிரிந்து நிற்கிறார்கள். தமிழர்கள் தமிழர்களாக இணைய
வேண்டும். ஜல்லிக்கட்டுக்கு விதித்த தடையை எதிர்க்காதது ஏன். திமுகவுக்கு
மாற்று அதிமுக. அதிமுகவுக்கு மாற்று திமுக. திமுக அமைச்சர்களை மாற்றாமல்
கெடுப்பார். ஜெயலலிதா அமைச்சர்களை மாற்றி கெடுப்பார்.

எங்கள் திருநாட்டில் எங்கள் நல் ஆட்சியே என்று நாம் தமிழர் கட்சி சார்பில்
தேர்தலில் நிற்கிறார்கள். மாற்றம் கொடுப்போம். செயலில் காட்டுவோம்.
கச்சத் தீவை இலங்கைக்கு தாரை வார்த்துக் கொடுத்தது திமுக ஆட்சியில் தான்.
திமுகவும, அதிமுகவும் ஒரு தடைவையாவது இலங்கை தமிழர்களுக்காக உயிர்நீத்த
முத்துக்குமார், செங்கொடிக்கு அஞ்சலி செலுத்தி இருக்கிறார்களா என்றார்.
மேலும், எல்லா தொழிலும் உள்ள இந்த நாட்டில் ஏன் பிச்சையெடுக்கும் நிலை.
ஆண்களுக்கு பெண்கள் சமமான நிலை உருவாக்கப்படும். நாம் தமிழர் கட்சியில் 42
பேர் பெண்கள். ஒருவர் திருநங்கை. நாடாளுமன்றத் தேர்தலில் 20 ஆண்கள், 20
பெண்கள் வேட்பாளராக நிறுத்துவோம். புதுச்சேரியிலும், காரைக்காலிலும்
தனித்தே போட்டியிடுவோம். பிப்ரவரிக்குள் வேட்பாளர்களை அறிவிப்போம். திமுக,
அதிமுகவுக்கு மாற்றாக நாம் தமிழர் கட்சி இருக்கும் என சீமான் பேசினார்.
எங்கள் திருநாட்டில் எங்கள் நல் ஆட்சியே, தலைநகரை மாற்றுவோம், தமிழகத்தையே
மாற்றுவோம்
என்கிற முழக்கங்களுடன் தேர்தலை சந்திக்க நாம் தமிழர் கட்சி தயாராகி விட்டது.
//tamil.oneindia.com/
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக