சனி, 23 ஜனவரி, 2016

ஜெ., விடுதலையை எதிர்ப்பது ஏன்? சுப்ரீம் கோர்ட்டில் தி.மு.க., விளக்கம்

புதுடில்லி: தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு எதிரான சொத்து குவிப்பு வழக்கில், மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ள, தி.மு.க., பொதுச் செயலர் அன்பழகன், சுப்ரீம் கோர்ட்டில் நேற்று, மனு சமர்ப்பிக்கப்பட்டதற்கான காரணங்களை குறிப்பிட்டார்.
சொத்து குவிப்பு வழக்கில், தமிழக முதல்வர் ஜெயலலிதா, அவர் தோழி சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு எதிரான சொத்து குவிப்பு வழக்கில், சிறப்பு கோர்ட் அளித்த தீர்ப்பை, கர்நாடகா ஐகோர்ட் ரத்து செய்தது.இதை எதிர்த்து, தி.மு.க., பொதுச் செயலர் அன்பழகன் சார்பில், அவர் வழக்கறிஞர் பிரகாசம், மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளார்.  தி.மு. க ஊழல் பண்ணியிருந்தா அவங்களும் கண்டிப்பா தண்டனை அனுபவிக்கனும். அதை நிரூபிக்க அ.தி. மு.க கேஸ் போடலாம்ல?  யாரு வேண்டாம்னு சொன்னா? வாய் கிழிய பேசற அடிமைகளே.. உங்க ஆத்தா தப்பு பண்ணுச்சா இல்லையான்னு சொல்லுங்க.. அடுத்தவன் தப்பு பண்ணுனான்.. அதனால எங்க ஆத்தாவும் பண்ணுச்சுனு சொல்ல வெட்கமா இல்லையா உங்களுக்கு? .
அம்மனு தாக்கல் செய்ததற்கான காரணங்கள் அடங்கிய மனு, சுப்ரீம் கோர்ட்டில் நேற்று சமர்ப்பிக்கப்பட்டது.b>அதில் கூறப்பட்டுள்ளதாவது:
ஜெயலலிதாவுக்கு எதிரான சொத்து குவிப்பு வழக்கு, அன்பழகன் தாக்கல் செய்த சிறப்பு மனுவின்அடிப்படையில், பெங்களூருவுக்கு மாற்றப்பட்டது. எனவே, தற்போது, ஜெயலலிதா விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து, மேல் முறையீடு செய்ய, அன்பழகனுக்கு உரிமை உண்டு.ஜெயலலிதா உள்ளிட்ட நால்வர் மீதான குற்றச்சாட்டுகளை, சிறப்பு கோர்ட் சரியான முறையில் விசாரித்து, அவர்களுக்கு தண்டனை விதித்தது.


கர்நாடகா ஐகோர்ட், அத்தீர்ப்பை ரத்து செய்துள்ள நிலையில், சுப்ரீம் கோர்ட் விசாரிக்க வேண்டிய அம்சங்கள்:
* குற்றம் சாட்டப்பட்ட நால்வரும், கர்நாடகா ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுக்கள் மீது, கர்நாடகா அரசைபிரதிவாதியாக சேர்க்காமல் முடிவு செய்யலாமா?
* குற்றம்சாட்டப்பட்டவர் பெற்ற, 13.5 கோடி ரூபாய் கடனை, கர்நாடகா ஐகோர்ட் தவறாக கணக்கிட்டதால், அவர் விடுவிக்கப்பட்டார்; அந்த உத்தரவு நிலைக்கத்தக்கதா?
* கணக்கில் உள்ள தவறுகளை சரிசெய்தால், வருவாய்க்கு அதிகமான சொத்தின் மதிப்பு, 16.32 கோடி ரூபாய். * இது, வருவாயை விட, 76.70 சதவீதம் அதிகம்.
* ஜெயலலிதாவுக்கு வெளிநாட்டிலிருந்து அனுப்பப்பட்ட 77 லட்சம் ரூபாய் தொடர்பான, சி.பி.ஐ.,யின் வழக்கு, சுப்ரீம் கோர்ட்டில் நிலுவையில் உள்ளது. அந்த தொகையை, வருவாயாக கருதலாமா?
* இக்காரணங்களால், குற்றம் சாட்டப்பட்டவரை விடுவித்த தீர்ப்பை ரத்து செய்து, அவருக்கு, சிறப்பு கோர்ட் அளித்த, நான்கு ஆண்டு சிறைத்தண்டனையை விதிக்க வேண்டும். இவ்வாறு அன்பழகன் தரப்பு மனுவில் கூறப்பட்டுள்ளது.  தினமலர்.com

கருத்துகள் இல்லை: