வியாழன், 21 ஜனவரி, 2016

ஜல்லிக்கட்டுத் தடை:மறுசீராய்வு மனு தள்ளுபடி

ஜல்லிக்கட்டுப் போட்டிகளுக்கு விதிக்கப்பட்டிருக்கும் தடையை நீக்க வேண்டுமெனக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மறுசீராய்வு மனுக்களை இந்திய உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. ஜல்லிக்கட்டு விளையாட்டுக்கு இந்திய உச்சநீதிமன்றம் மீண்டும் மறுப்பு பொங்கல் தினத்தையொட்டி, தமிழ்நாட்டின் பல மாவட்டங்களில் நடத்தப்படும் ஜல்லிக்கட்டுப் போட்டிகளுக்கு 2014ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றம் நிரந்தரத் தடைவிதித்தது. காளைகளை காட்சிப் படுத்தக்கூடாத விலங்குகளின் பட்டியலில் மத்திய அரசு இடம்பெறச் செய்ததையடுத்து இந்தத் தடை விதிக்கப்பட்டது. இந்தத் தடையை மறுசீராய்வு செய்ய வேண்டுமென ஜே.கே. ரித்தீஷ், ராஜசேகரன், பாரம்பரிய விளையாட்டுக் கழகம் ஆகியவற்றின் சார்பில் மூன்று மனுக்கள் தாக்கல்செய்யப்பட்டன.
அலங்காநல்லூரில் கருப்புக் கொடி கட்டி மக்கள் தடைக்கான எதிர்ப்பை தெரிவித்திருந்தனர். இந்த மனுக்கள், உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கோபால கவுடா மற்றும் பினாகி சந்திரகோஷ் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இந்த சீராய்வு மனுக்களை விசாரிக்க முடியாது என நீதிபதிகள் கூறி, அவற்றைத் தள்ளுபடி செய்தனர். முன்னதாக, இந்த ஆண்டு பொங்கலை ஒட்டி ஜல்லிக்கட்டுப் போட்டிகளை நடத்த அனுமதியளிக்கும் விதமாக கடந்த 7ம் தேதி மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் புதிய அறிவிக்கையை வெளியிட்டது. ஆனால், உச்சநீதிமன்றம் ஜனவரி 12ம் தேதி இடைக்கால தடை விதித்தது. இதனால், இந்த ஆண்டு ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடைபெறவில்லை.bbc.tamil.com

கருத்துகள் இல்லை: