இந்நிலையில், சில மாதங்களுக்கு முன்பு, முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி பிறந்த நாளை முன்னிட்டு தமிழக காங்கிரஸ் தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவன் நுழை வாயிலில் மகிளா காங்கிரஸ் சார்பில் கடந்த ஆண்டு டிஜிட்டல் பேனர்கள் வைக்கப்பட்டிருந்தன. அந்த பேனரில் இருந்த விஜயதாரணியின் படத்தை தமிழக காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனின் ஆதரவாளர்கள் சேதப்படுத்தினர். இதனால், விஜயதாரணி ஈவிகேஎஸ் இளங்கோவனிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். பின்னர், தன்னை அவதூறாகப் பேசியதாக விஜயதரணி தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் மீது காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தார். இதையடுத்து, விஜயதரணி தரப்பில் ஜாதி பெயரை குறிப்பிட்டு திட்டியதாகக் கூறி கட்சியின் தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர் பிரிவு சார்பில் புகார் தெரிவிக்கப்பட்டது.
அதற்குப் பிறகு, தமிழக காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து இளங்கோவனை நீக்கக்கோரி சோனியா, ராகுல் காந்திக்கு விஜயதாரணி கடிதம் எழுதியிருந்தாக கூறப்படுகிறது.">இரு தரப்பினரும் காவல் நிலையத்தில் பதிவு செய்துள்ள புகார்களை பரஸ்பரம் செய்து திரும்பப் பெற வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியா காந்தி உத்தரவிட்டார். மேலும், இருவரையும் நேரில் அழைத்து அகில இந்திய மகளிர் காங்கிரஸ் தலைவர் ஷோபா ஓஜா விளக்கம் கேட்டு இருந்தார்."
t;இந்நிலையில், செய்தியாளர்களிடம் விஜயதாரணி கூறியதாவது, தொடர்ந்து பெண்களை பற்றி மிக அவதூராக பேசி வரும் ஈவிகேஎஸ் இளங்கோவன், சில நாட்களுக்கு முன்பு தமிழக முதலமைச்சர் மற்றும் பிரதமரை பற்றி இழிவாக பேசியது, என்னை தரக்குறைவாக பேசியது, பாஜக தலைவர் தமிழிசை அவர்களை தரக் குறைவாக நடத்தியது, காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த வளர்மதியை அடித்தது என தொடர்ந்து பெண்களுக்கு எதிராக செயல்பட்டுக் கொண்டிருக்கிறார் இளங்கோவன்.தமிழக மகிளா காங்கிரஸ் தலைவி பதவியில் இருந்து தன்னை நீக்கியது நியாயமற்றது என்றும் ஒரு சிலரின் அழுத்தம் காரணமாகவே ராகுல் காந்தி என் மீது நடவடிக்கை எடுத்துள்ளார்.
நான் என்ன தவறு செய்தேன் என்று எனக்கு தெரியவில்லை என்றும் இளங்கோவன் மீது நடவடிக்கை எடுப்பதற்குப் பதிலாக என் மீது நடவடிக்கை எடுத்துள்ள செயல் எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது என்று அவர் குறிப்பிட்டார்.>இதனை தொடர்ந்து, தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி.கே வாசனை தொலைபேசியில் தொடர்பு கொண்டு, தனக்கு நேர்ந்த அநீதி குறித்து விவரித்ததாகவும், காங்கிரஸ் மேலிடம் தொடர்ந்து தமிழகத்தில் தவறு செய்தவரை விட்டுவிட்டு,தவறினால் பாதிக்கப்பட்டவர் மீது டவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டார். இந்நிலையில், தமாகவில் இணைவது குறித்த தனது விருப்பத்தையும் ஜிகே வாசனிடம் விஜயதாரணி தெரிவித்ததாக தகவல் வெயாகியுள்ளது. மேலும், அவர் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவை சட்டப்பேரவையில் சந்தித்து இதுகுறித்து பேசியுள்ளதாக கூறப்படுகிறது. வெப்துனியா.com
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக