லண்டன், ஜன. 19–
இங்கிலாந்தில்
குடியேறும் வெளிநாட்டினர் ஆங்கிலம் கற்காவிட்டால் நாட்டை விட்டு வெளியேற
வேண்டும் என பிரதமர் கேமரூன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இங்கிலாந்தில் தற்போது ஏராளமான வெளிநாட்டினர் குடியேற்ற உரிமை பெற்றுள்ளனர். அவர்கள் தங்களது வாழ்க்கை துணை அதாவது கணவன் அல்லது மனைவியின் மூலம் குடியுரிமை விசா பெற்றுள்ளனர்.
அவர்களில் பெரும்பாலான பெண்களுக்கு ஆங்கிலம் தெரிவதில்லை. அதனால் அவர்கள் வெளி மனிதர்களுடன் ஆன தொடர்பை துண்டித்து கொள்கின்றனர். எனவே இங்கிலாந்தில் புதிய திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
அதன்படி அங்கு தங்கியிருக்கும் வெளிநாட்டினர் சரளமாக ஆங்கிலத்தில் பேசும் திறன் பெற்று இருக்க வேண்டும். இல்லாவிட்டால் நாட்டை விட்டு வெளியேற்றப்படுவார்கள்.
இதற்கான அறிவிப்பை பிரதமர் டேவிட் கேமரூன் வெளியிட்டுள்ளார். இது குறித்து இவர் வெளியிட்டுள்ள அறிவிப்பு பத்திரிகையில் வெளியாகி உள்ளது.
அதில், ‘‘வாழ்க்கை துணை விசா’’ மூலம் இங்கிலாந்தில் 5 ஆண்டுகள் தங்கியிருப்பவர்கள் ஆங்கில அறிவில் மிகவும் பின் தங்கியுள்ளனர். அவர்கள் ஆங்கிலத்தில் சரளமாக பேசவும், திறமையை வளர்த்து கொள்ளவும் அரசு ரூ.200 கோடி ஒதுக்கியுள்ளது.
இதன் மூலம் அவர்களுக்கு வீடுகள், பள்ளிகள் மற்றும் சமுதாய மையங்களில் ஆங்கில வகுப்புகள் நடத்தப்படும். அதில் அவர்கள் கற்றுத் தேர்வு பெறலாம். அவர்களின் ஆங்கில திறமை அறிய 2½ ஆண்டுகளில் தேர்வு நடத்தப்படும். அதில் அவர்கள் தேர்ச்சி பெறாவிட்டால் நாட்டை விட்டு வெளியேற்றப்படுவார்கள்’’ என எச்சரிக்கை விடுத்துள்ளார். மாலைமலர்.com

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக