வெள்ளி, 22 ஜனவரி, 2016

சட்டப்பேரவையில் கலைஞர் மீது உரிமை மீறல் தீர்மானம் நிறைவேற்றம்

திமுக தலைவர் கலைஞர் மீது கொண்டு வரப்பட்ட உரிமை மீறல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அவை முன்னவர் ஓ.பன்னீர்செல்வம் கொண்டுவந்த உரிமை மீறல் தீர்மானம் நிறைவேறியது. திமுக தலைவர் கலைஞர் மீதான உரிமை மீறல் பிரச்சனை குறித்த விசாரணை அறிக்கை சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்யப்பட்டது. துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் அறிக்கை தாக்கல் செய்தார்.
இதையடுத்து சட்டப் பேரவையில் கூச்சல் குழப்பத்தில் ஈடுபட்ட திமுக உறுப்பினர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது. முன்னதாக தமிழக சட்டப்பேரவையில் வீட்டு வசதி மற்றும் வேளாண்மை துறை மீதான மானியக் கோரிக்கை விவாதம் நடந்தது. இந்த விவாதத்துக்கு அமைச்சர் ஆர்.வைத்திலிங்கம் பதில் அளித்தார். அப்போது அமைச்சர் ஆர்.வைத்திலிங்கம் சில ஆட்சேபனையான கருத்துக்களை தெரிவித்ததாக தி.மு.க. தலைவர் கலைஞர் புகார் கூறி இருந்தார்.

 இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை பத்திரிகைகளில் வெளியாகி இருந்தது. இந்த நிலையில் சட்டப் பேரவையில் தான் பேசாத விஷயங்களை பேசியதாக கலைஞர் அறிக்கையில் கூறி இருப்பதாகவும் அவர் மீது அவை உரிமை மீறல் பிரச்சனை கொண்டு வருவதாகவும் இம்மாதம் 4–ந்தேதி சபாநாயகர் தனபாலிடம் அமைச்சர் வைத்திலிங்கம் கடிதம் கொடுத்திருந்தார்.

இந்த பிரச்சனை :கருணாநிதி மீது அவை உரிமை மீறல் குழு நடவடிக்கை வெட்கக்கேடானது: ஸ்டாலின் காட்டம் அமைச்சர் வைத்திலிங்கம் பற்றி திமுக தலைவர் கருணாநிதி கட்டுரை ஒன்று எழுதியிருந்தார். அதன் மீது தமிழக சட்டமன்றம் அவை உரிமை மீறல் நடவடிக்கை எடுத்தது. அந்த அறிக்கை சட்டமன்றத்தில் இன்று தாக்கல் செய்யப்பட்டது.சபை உரிமைக்குழு தாக்கல் செய்த அறிக்கையை பற்றி பேச திமுக உறுப்பினர் துரைமுருகனுக்கு பேச அனுமதி மறுக்கப்பட்டதை அடுத்து திமுக உறுப்பினர்கள் பேச அனுமதிக்கும் படி வலியுறுத்தினர். இதனால் சபாநாயகர் அவர்களை வெளியேற்றியதாக சபைக்கு வெளியே வந்த திமுக பொருளாளர் ஸ்டாலின் கூறினார். மேலும் அவை உரிமைக்குழு அவர் மீது எடுத்திருக்கும் இந்த நடவடிக்கை அவசரகரமான நடவடிக்கை. சந்தனத்தை அரைக்க அரைக்கத்தான் மணம் வீசும். அதனால் கலைஞர் மீதான இந்த நடவடிக்கை அவரை மேலும் உயர்த்தும் என அவர் தெரிவித்தார்.

அமைச்சர் வைத்திலிங்கம் சத்துணவுத் திட்டத்தை பிச்சைக்காரர் திட்டம் என கூறியிருந்தார். இது தொடர்பாக அவை உரிமை மீறல் குழுவிடம் நடவடிக்கை எடுக்க கடிதம் கொடுத்திருந்தோம் ஆனால் அதற்கு பதில் இல்லை."
கே.பி.முனுசாமி போக்குவரத்து ஊழியர்கள் பற்றி ஒரு கருத்து தெரிவித்திருந்தார். அதுபற்றி எ.வ.வேலு அவை உரிமைக்குழுவிடம் நடவடிக்கை எடுக்க கடிதம் கொடுத்தார். அதற்கும் பதில் இல்லை. அரசியல் பழிவாங்கும் நோக்கத்துடன் தலைவர் கலைஞர் மீது நடவடிக்கை எடுத்திருப்பது வேதனை அளிக்கிறது, இது வெட்கக்கேடானது என ஸ்டாலின் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை: