ஞாயிறு, 17 ஜனவரி, 2016

இயக்குனர் பாலா : அம்மா கொடுக்குற இலவச அரிசியால நம்ம பொழப்பு ஓடுது...ஜிங்குஜா

அதிமுக-வில் இணையப் போகிறாரா இயக்குநர் பாலா? சேது’ படத்தின் மூலம்
தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமான பாலா, தனது முதல் படத்திலையே தேசிய விருது வென்றார். இதையடுத்து தொடர்ந்து அவர் இயக்கிய ‘நந்தா’, ‘பிதாமகன்’, ’நான் கடவுள்’ ஆகியப் படங்களின் மூலம் தமிழ் சினிமாவில் தனி இடத்தைப் பிடித்தவர் இந்திய சினிமாவின் பார்வையையும் தன் மீது படச்செய்தார்.வியாபார சினிமாவில் சிக்காத இயக்குநர்களில் ஒருவராக திகழ்ந்து வந்த பாலா, தன் மீது அரசியல் சாயம் பூசிக்கொள்ளாமல் இருந்தார். ஆனால், நேற்று வெளியாகியுள்ள அவரது ‘தாரை தப்பட்டை’ படத்தின் மூலம் அவர் எதிர்காலத்தில் அரசியலில் ஈடுபடுவாரோ என்று எண்ணத் தோன்றுகிறது. இயக்குனர் பாலாவுக்கு ரொம்ப கொடுமையா சகிக்க முடியாத செட் புரோப்பார்டீஸ் தாய்ன் பிடிக்கும்  இந்த அழுவுணிகளோடதான் செட்டாகும் ....

ஆம், ‘தாரை தப்பட்டை’ படத்தில் கஷ்ட்டப்படும் கரக்காட்ட கலைஞர் ஒருவர் சசிகுமாரிடம், “ஏதோ அந்த அம்மா கொடுக்குற இலவச அரிசியால நம்ம பொழப்பு ஓடுது” என்று சொல்கிறார். புரிந்ததா அந்த அம்மா யார் என்று.
ஆக, எதிர்காலத்தில் இயக்குநர் பாலா அதிமுக-வில் இணைந்தாலும் ஆச்சரியப்படுவதிற்கில்லை என்று தோன்றுகிறது./tamil.chennaionline.com

கருத்துகள் இல்லை: