
மேலும் அவர் கூறுகையில், ஜாதி பிரச்சினையாக
மாற்ற யாரும் முயல வேண்டாம். ரோகித்தை சஸ்பெண்ட் செய்த வார்டனும் தலித்
பிரிவை சேரந்தவர்தான்.
மாணவர்களை சஸ்பெண்ட் செய்தது நியாயமான நடவடிக்கை என பல்கலைக்கழகம்
கூறுகிறது. எனவேதான், சஸ்பெண்ட் தண்டனையை எதிர்த்து, மாணவர்கள் தொடர்ந்த
வழக்கை விசாரித்த ஹைகோர்ட், தண்டனைக்கு தடை விதிக்க மறுத்துவிட்டது. ரோகித்
தனது தற்கொலை கடிதத்தில் கூட, யாரையும் குற்றம் சாட்டவில்லை.
செகந்திராபாத் பாஜக எம்.பியும் அமைச்சருமான பண்டாரு தத்தாத்ரேயா மத்திய
அரசுக்கு கடிதம் எழுதியதாகவும், எனவே அவரையும் குற்றவாளியாக கருதி
பதவியிலிருந்து விலக்குமாறும் காங்கிரஸ் கூறுகிறது. ஆனால் காங்கிரஸ்
எம்.பி. ஹனுமந்தராவ் இதுபோன்ற கடிதங்களை ஏற்கனவே எழுதியுள்ளார். ஹைதராபாத்
பல்கலையில் நடைபெறும் முறைகேடுகளை அவர் தெரிவித்துள்ளார். இவ்வாறு ஸ்மிருதி
இரானி தெரிவித்தார்
/tamil.oneindia.com/
/tamil.oneindia.com/
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக