ஞாயிறு, 17 ஜனவரி, 2016

ஜல்லிகட்டு...TN பாஜகவின் கதை கந்தல்...இந்துத்வாவின் தவறான கணக்கு கூட்டல்

இருந்த கொஞ்சம் நல்ல பெயரையும் கந்தர கோலத்தில் ஜல்லிக்கட்டு மூலம் தமிழக பி ஜே பி கட்சியினர் முடிவுக்கு கொண்டு வந்து விட்டனர் . இதன் மூலம் , வரும் சட்ட சபை தேர்தலில் தமிழக பி ஜே பி யை எந்த கட்சியும் கூட்டணிக்குள் சேர்த்து கொள்ள மாட்டார்கள் என்பது தான் உண்மை . ஒரு அருமையான வாய்ப்பை பி ஜே பி யினர் பறி கொடுத்து விட்டனர் . தமிழக பி ஜே பி க்கு அருமையான வாய்ப்புகள் இரண்டு கிடைத்தன . 1 ) சென்னை மற்றும் சுற்றுப்புற மாவட்டங்களில் வெள்ளம் மற்றும் நிவாரணம் - அதை சரியான முறையில் கையாள தெரியவில்லை 2 ) ஜல்லிக்கட்டு - இதையும் நழுவ விட்டு விட்டனர் . தமிழக பி ஜே பி யின் தமிழிசை , முரளிதர் ராவ் , இல கணேசன் மூவரும் தவறான பாதையில் சென்றதின் விளைவை இப்போது தான் மத்திய தலைமை உணர்ந்து உள்ளது . கை மீறி போய் விட்டது . TN பி ஜே பி  தனியாக போட்டியிட வேண்டியது தான் .
தமிழக பா.ஜ., மீது பாய்ந்த 'ஜல்லிக்கட்டு' 'ஜல்லிக்கட்டு விவகாரத்தை, சட்ட ரீதியாக அணுக வேண்டிய நேரத்தில், மக்களின் உணர்வு, நம்பிக்கை, கலாசாரம் எனக் கூறி, தேவையற்ற தர்ம சங்கடத்தை, தமிழக பா.ஜ., தலைவர்கள், மத்திய அரசுக்கு ஏற்படுத்திவிட்டனர்' என, அக்கட்சிக்குள் புகைச்சல் கிளம்பி உள்ளது
'உச்ச நீதிமன்ற தீர்ப்பை செயலற்றதாக்க, அரசு ஆணை ஒன்று வெளியிடுவது தவறான முன் உதாரணம். இதை, பா.ஜ., அரசு செய்திருக்கக் கூடாது' என, பா.ஜ.,வின் தீவிர ஆதரவாளரும், விலங்குகள் நல ஆர்வலருமான ராதா ராஜன் சுட்டிக் காட்டினார்.

கட்டாயம்:
ஜனநாயகத்தில், நீதிமன்றத்தின் மாண்பை போற்ற வேண்டிய கட்டாயம் மத்திய, மாநில அரசுகளுக்கு உள்ளது. இதிலிருந்து திசை மாறி, சட்ட ரீதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு அரசு செயல்படக் கூடாது. ஜல்லிக்கட்டுக்கு தடை விதித்து, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில், அதிலிருந்து விலக்கு பெற, புதிய சட்டம் கொண்டு
வர வேண்டும். அதை செய்யாமல், பயனற்ற அரசு ஆணையை வெளியிட்டதால், மத்திய அரசுக்கு கெட்ட பெயர் ஏற்படுத்தி உள்ளது என்றும் அவர் கூறுகிறார்.

இதற்கிடையே, 'தமிழக மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பு அளிக்க வேண்டும். எப்படியாவது ஜல்லிக்கட்டைநடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். இதன்மூலம், தமிழகத்தில் வலுவாக காலுான்ற கட்சிக்கு வாய்ப்பு கிடைக்கும்' என, கட்சியின் மத்திய தலைமையை, தமிழக பா.ஜ., தலைவர்கள் வற்புறுத்தினர்.

தமிழக சட்டசபை தேர்தல் நடக்க மூன்று மாதங்கள் உள்ள நிலையில், இந்த முயற்சி பலனளிக்குமா என்ற, மத்திய தலைமையின் கேள்விக்கு, 'மிகச் சிறப்பான வரவேற்பு கிடைக்கும்' என, தமிழக தலைவர்கள் கோரஸாக கூறியுள்ளனர். இடைவிடாத இந்த வற்புறுத்தலால், பா.ஜ., மத்திய தலைமை கேட்டுக் கொள்ள, அவசர அவசரமாக, ஒரு அறிவிக்கையை மத்திய அரசு வெளியிட்டது. அறிவிப்பு வலுவாக இல்லாமல் இருந்ததால், வெளியான வேகத்தில் தடை விதிக்கப்பட்டது.

பாகிஸ்தான் அத்துமீறல்:
இதோடுபிரச்னையை விடாமல், இடைக்கால தடைக்கு, மறு சீராய்வு மனு தாக்கல் செய்து, அதுவும் தள்ளுபடி செய்யப்பட்டது, பெரும் தர்ம சங்கடத்தை, மத்திய அரசுக்கு ஏற்படுத்திவிட்டது. எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறல் பற்றி
Advertisement
விவாதிக்கக்கூடிய மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில்,ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்ட தடை குறித்தும் விவாதிக்க வேண்டிய கட்டாயத்துக்கு, மத்திய அரசு தள்ளப்பட்டது. இதனால், அதிருப்தி அடைந்த பா.ஜ., மூத்த தலைவர்கள், பிரச்னையை மாநில அரசின் கையில் கொடுத்து விடலாம் என, முடிவெடுத்து விட்டனர்.

இம்முடிவு, மேலும் பிரச்னையை சிக்கலாக்கி விட்டது. இதற்கெல்லாம், தமிழக பா.ஜ., தலைவர்களின் அவசரமே காரணம் என, கட்சியின் மத்திய தலைவர்கள் கடிந்து கொண்டதாக, பா.ஜ., வட்டாரங்களில் கூறுகின்றனர். இந்த இக்கட்டான நிலையில், மத்திய தலைமையை சந்திக்க, தமிழக பா.ஜ., தலைவர்கள் போட்டிருந்த திட்டமும் கடைசி நேரத்தில் கைவிடப்பட்டது. ஆர்வ கோளாறால் ஏற்பட்ட இந்நிலைக்கு, தமிழக பா.ஜ., தலைவர்கள் செய்வதறியாமல் தவிக்கின்றனர்.

- நமது சிறப்பு நிருபர் -  தினமலர்.com 

கருத்துகள் இல்லை: